நலவாழ்வு பரிசோதனை பற்றி
中国国际广播电台

சீன மக்கள் குடியரசின் நலவாழ்வு பரிசோதனை பியூரோ, வெளிநாடுகளுடன் தொடர்புடைய நலவாழ்வுத் பரிசோதனைத் துறையில் சட்டத்தை செயல்படுத்த அரசவையிடமிருந்து அதிகாரம் பெற்றுள்ள பிரிவாகும். அதன் தலைமையின் கீழுள்ள பல்வேறு இடங்களின் எல்லை நலவாழ்வு பரிசோதனை குழுக்கள் வெளிநாடுகளுக்கு திறந்துவைக்கப்பட்ட சீனாவின் நுழைவாயில்களில் சீனாவுக்கு வருபவர்மீதும் வெளியே செல்பவர்மீதும் சட்டத்தின் படி நலவாழ்வு பரிசோதனை செய்கின்றன. சுங்கத்துறை நலவாழ்வு பரிசோதனை பிரிவு கையொப்பமிட்ட அனுமதி பத்திரத்தை கண்ட பிறகே பயணிகளையும் அவர்களின் சிறப்பு பொருட்களையும் விட்டுவிடும்.

சீனா வரும் அல்லது வெளியே போகும் பயணிகள், பணியாளர்கள் ஆகியோர் கொண்டுவரும் அல்லது அனுப்பும் தொற்று நோய் பரவக் கூடிய மூட்டை முடிச்சுகளும் பொருட்களும் நலவாழ்வு பரிசோதனைக்குள்ளாக வேண்டும். நோய் பிரதேசங்களிலிருந்து வரும் அல்லது தொற்று நோயால் பீடிக்கப்பட்ட பல்வகை உணவுப் பொருட்கள், அருந்து பானங்கள், நீர் வாழ் பொருட்களை நலவாழ்வு பரிசோதனை பிரிவு கையாளும் அல்லது ஒழிக்கும். அத்துடன் இப்பணி பற்றிய அறிக்கையில் கையொப்பமிடும். சுங்கத் துறை இதை கண்ட பின், விட்டுவிடும்.

YELLOW FEVER நோய் பிரதேசத்திலிருந்து வருபவர்கள் இந்த நோய் தடுக்க, தடுப்பூசி போட்டதற்கான பயனுள்ள சான்றிதழை நலவாழ்வு பரிசோதனை பிரிவுக்குக் காட்ட வேண்டும். பயனற்ற சான்றிதழைக் கொண்டவரை அந்த பிரதேசத்தை விட்டு புறப்பட்ட நாள் முதல் 6 நாட்களுக்குள் பரிசோதனை செய்யும், அல்லது தடுப்பூசி போடும். இதற்கான சான்றிதழ் நடைமுறைக்கும் வரும் வரை அவர் சீனா நுழையலாம்.

சீனா வரும் அல்லது வெளியே போகும் போக்குவரத்து கருவி, மனிதர், உணவுப் பொருள், குடிநீர், இதர பொருட்கள், நோய் வைரசால் பீடிக்கப்பட்ட பூச்சி, விலங்கு ஆகியவையும் நலவாழ்வு பரிசோதனைக்குளாக வேண்டும்.

எய்ட்ஸ் நோய், பால்வினை நோய், தொழு நோய் மனநோய், காச நோய் ஆகிய நோயால் பீடிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் சீனா வர அனுமதிக்கப்படாது.