மக்கள் தொகை 50 லட்சத்துக்கு மேற்பட்ட தேசிய இனங்கள்

中国国际广播电台

ஹான் இனம்

       சீனாவின் 56 தேசிய இனங்களில், ஹான் இனம், மக்கள் தொகை மிகுந்த இனமாகும். உலகிலேயே மக்கள் தொகை அதிகமாக உள்ள இனமும் இதுவே. தற்போது ஹான் இனத்தின் மக்கள் தொகை 120 கோடியாகும். ஹான் இன மக்கள் முன்பு ஹுவா சியா அழைக்கப்பட்ட மத்திய சீனாவில் வாழ்கின்றனர். இவ்வினம் 5000 ஆண்டு நாகரிக வரவாறு உடையது. பின்னர், அது மற்ற இனங்களுடன் ஒன்றிணைந்தது. ஹான் வமிச காலத்தில் இருந்து ஹான் இனம் என அழைக்கப்படுகிறது. இவ்வினத்துக்கு தனியே மொழியும் எழுத்துகளும் உண்டு. ஹான் இன மொழி, ஹான் திபெத் மொழி குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு வட்டார மொழி, ஊ வட்டார மொழி, சியாங் வட்டார மொழி, கான் வட்டார மொழி, கே ஜியா வட்டார மொழி, தென் பு ஜின் மாநில வட்டார மொழி, வட பு ஜின் மாநில வட்டார மொழி, யெயு அதாவது குவாங் துங் மாநில வட்டார மொழி ஆகிய 8 வட்டார மொழிகள் இதில் இடம்பெறுகின்றன. பொதுவான சீன பேச்சு மொழி, பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஹான் இனத்தின் எழுத்துக்கள், உலகில் மிக நீண்டகால வரலாறுடைய எழுத்துக்களில் ஒரு வகையாகும். ஆமை ஓடு அல்லது விலங்கு எலும்பில் செதுக்கப்பட்ட கையெழுத்து, ஜின் எழுத்து ஆகியவற்றிலிருந்து இன்றைய சதுக்க வடிவிலான எழுத்துக்களாக மாற்றம் பெற்றது. 80 ஆயிரம் எழுத்துக்களில் சுமார் 7000 எழுத்துக்கள் பொதுவாக பயன்படுகின்றன. பொதுவாக பயன்படுத்தப்பட்ட சர்வதேச மொழிகளில் ஒன்றாகும் ஹான் இன மொழி. ஹான் இனத்தின் அடிப்படை உணவு, தானியமாகும், பல்வகை விலங்குகளின் இறைச்சி, காய்கறி ஆகியவை, துணை உணவு. நீண்டகால வளர்ச்சிப் போக்கில், நாளுக்கு 3 வேளை சாப்பாடு என உணவு வழக்கம் இவ்வினத்தில் உருவாகியுள்ளது. அரிசி மற்றும் மாவு ஹான் இனத்தின் முக்கிய உணவில் 2 முக்கிய பொருட்களாகும். தவிர, மக்கா சோளம், சீன மக்கா சோளம், நவ தானியங்கள், கிழங்கு வகைகள் முதலியவை, வெவ்வேறான இடங்களில் முக்கிய உணவுகளாகும். பல காரணிகளால், உணவு வழக்கத்தில், பல்வகையான கறிவகைகளை ஹான் இனம் உருவாக்கியுள்ளது. ஹான் இன மற்றும் மற்ற தொடர்புடைய தேசிய இனங்களின் உணவு பாணிகள், தெற்கு இனிப்பு, வடக்கு உவர்பு, கிழக்கு காரம், மேற்கு புளிப்பு என தொகுக்கப்படுகின்றன. தற்போது, ஹு நான் கறிவகை, சி சுவான் கறிவகை, வட கிழக்கு சீன கறிவகை, குவாங் துங் கறிவகை உள்ளிட்ட 8 புகழ்பெற்ற கறிவகைகள், பொது மக்களின் அடிப்படை சமையல் முறையில் இருந்து உருவாகியுள்ளன. தேயிலை பிறந்த மண் சீனா ஆகும். உலகில் வடிப்பு தொழில் நுட்பத்தை மிக முன்னதாக கண்டுபிடித்த நாடும் சீனாதான் ஆகும். சீனாவின் மது மற்றும் தேனீர் பண்பாடு நீண்டகால வரலாறு உடையது. இவ்விரு பானங்களைத் தவிர, சில பழ வகைப் பானம், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பருவங்களில், மக்கள் அருந்தும் பானமாக இருக்கின்றன. ஹான் இனம் கொண்டாடும் விழாகள் அதிகம். வசந்த விழா இவற்றில் மிகவும் முக்கியமான பாரம்பரிய விழாவாகும். தவிர, சீன சந்திர நாள் காட்டியின் படி, முதலாவது திங்கள் 15ஆம் நாளில் விளக்கு திரு விழா, 4வது திங்கள் 5ஆம் நாளில் காலமான உறவினருக்கு அஞ்சலி செலுத்தும் நாள், 5வது திங்கள் 5ஆம் நாளில் டிராகன் படகு விழா, 8வது திங்கள் 15ஆம் நாளில் நிலா விழா ஆகியவை, ஹான் இன மக்களுக்கு முக்கிய விழாகளாகும்.

சுவாங் இனம் 

       சீனாவின் சிறுப்பான்மை தேசிய இனங்களிலும் சுவாங் இனத்தின் மக்கள் தொகை மிகவும் அதிகமாகும். சீனாவின் தெற்கு பகுதியிலுள்ள குவாங் சி சுவாங் இன தன்னாட்சி பிரதேசத்தில் சுவாங் இன மக்கள் குழுமி வாழ்கின்றனர். இவ்வினம் பயன்படுத்தும் சுவாங் மொழி, ஹான்-திபெத் மொழி குடும்பத்தைச் சேர்ந்தது. நீண்டகால வரலாறு உடைய சுவாங் இனம், சீனாவின் தெற்கு பகுதியிலுள்ள பழங்குடி இனமாகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், சுவாங் இனத்தின் மூதாதையர் தெற்கு சீனாவில் வாழ்ந்தனர். 1958ஆம் ஆண்டில், குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டது. வேளாண் தொழிலில் ஈடுபட்டு, நெல், மக்கா சோளம் ஆகியவற்றை முக்கியமாக பயிரிட்டு வாழ்க்கை நடத்துகிறது. பாடல் பாடுவதில் விருப்பம் உள்ளவர்கள், சுவாங் இனம் பாடல் கடல்ஆக புகழ்ந்து பேற்றப்படும். அழகான சுவாங் பட்டு சரிகை, சுவாங் இன மக்களின் பாரம்பரிய கை வினை பொருளாகும். கடந்த காலத்தில், இயற்கை மற்றும் பல தெய்வ வழிபாடு உள்ள பழைய மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். தாங், சுங் வமிசத்துக்குப் பின், புத்த மதம் மற்றும் தாவ் மதம் அடுத்தடுத்து சுவாங் இனப் பிரதேசத்தில் பரவின. சமிபடகாலத்தில், கிறிஸ்தவ மதம் மற்றும் கத்தோலிக்க மதம் இப்பிரதேசத்தில் பரவிய போதிலும், செல்வாக்கு அதிகம் பெறவில்லை. 


ஹுய் இனம் 

       ஹுய் இன மக்களின் எண்ணிக்கை 98 லட்சமாகும். வட மேற்கு சீனாவின் நிங் சியா ஹுய் இன தன்னாட்சி பிரதேசத்தில் அவர்கள் குழுமி வாழ்கின்றனர். மற்ற பல இடங்களிலும் ஹுய் இன மக்கள் வாழ்கின்றனர். சீனாவின் சிறுப்பான்மை தேசிய இனங்களில், இந்த இனத்தவர்தான் மிகவும் பரவி வாழ்கின்றனர். ஹுய் இன மக்கள் நீண்டகாலமாக ஹான் இன மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இதனால் அவர்களில் பெரும்பாலோர் ஹான் இன மொழியில் பேசுகின்றனர். மற்ற இனத்துடன் வாழ்ந்தினால் அந்த இன மொழியில் அவர்களால் பேச முடியும். அரபு மற்றும் பாரசீக மொழி சில ஹுய் இன மக்களுக்கு நன்கு தெரியும். 7வது நூற்றாண்டில் ஹுய் இனம் தோன்றியது. அப்போது, அரபு மற்றும் பாரசீக வணிகர்கள் சீனாவுக்கு வந்து வியாபாரம் செய்தனர். சீனாவின் தென் கிழக்கு கடலோரத்திலுள்ள குவாங் சோ, சுவாங் சோ முதலிய இடங்களில் அவர்கள் தங்கி, சில நூறு ஆண்டுகால வளர்ச்சி மூலம், ஹுய் இனத்தின் ஒரு பகுதியாக மாறி விட்டனர். தவிர, 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போரினால் சீனாவில் குடிபெயர நேரிட்ட மத்திய ஆசிய மக்கள், பாரசீக மக்கள் மற்றும் அரபு மக்கள், திருமணம், மத நம்பிக்கை முதலியவற்றின் மூலம், ஹான் இன மக்கள், உய்கூர் இன மக்கள் மற்றும் மங்கோலிய மக்களுடன் கலந்து விட்டனர். ஹுய் இனம் இவ்வாறாக படிப்படியாக உருவானது. இஸ்லாமிய மதத்தில் ஹுய் இன மக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். அவர்கள் வசிக்கும் நகரங்களிலும் ஊர்களிலும், மசூதிகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு சிறப்பான உணவு வழக்கம் உண்டு. ஹுய் இன மக்களுக்கு, சைவம் எனும் பலகை தொங்கவிடப்பட்ட உணவு விடுதிகளும் கடைகளும் ஹுய் இன மக்களுக்கு சிறப்பாக சேவை புரிகின்றன. ஹுய் இனத்தின் பொருளாதாரமும் பண்பாடும் ஓரளவு உயர் நிலையில் உள்ளது. சீனாவின் வரலாற்று வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது.


மங்கோலிய இனம் 

      மங்கோலிய இனத்தின் மக்கள் தொகை சுமார் 58 லட்சமாகும். உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசம், சின் சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம், சிங் ஹாய், கான் சு, ஹெய் லுங் சியாங், ஜி லின், லியாவ் நிங் ஆகிய மாநிலங்களின் மங்கோலிய இன தன்னாட்சி மண்டலங்களிலும் மாவட்டங்களிலும் மங்கோலிய இன மக்கள் குழுமி வாழ்கின்றனர். மங்கோலிய இன மொழி, அல்தாய் மொழி குடும்பத்தைச் சேர்ந்தது. மங்கோலியா என்ற பெயர் தாங் வமிசத்தில் தோன்றியது. அப்போது மங்கோலிய என்பது, ஒரு பழங்குடியின் பெயராகும். அது தோன்றிய இடம் ஏல்குனா ஆற்றின் கிழக்கு கரையில் உள்ளது. பழங்குடி இனங்களுக்கிடையில் மனிதர்களையும், கால்நடைகளையும் சொத்துகளையும் கொள்ளையடிக்கும் போர் அடிக்கடி நிகழ்ந்தது. 1206ஆம் ஆண்டு, தியெ மு சென் மங்கோலிய இன மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செங் ஜி சி மன்னராக அழைக்கப்பட்ட அவர் மங்கோலிய நாட்டை நிறுவினார். சீனாவின் வட பகுதியில் வலுவான நிதானமான இனம் உருவாகியது இதுவே முதல் முறையாகும். பின்னர், செங் ஜி சி மன்னர் மங்கோலிய இனத்தின் பழங்குடிகளை ஒன்று திரட்டி, சீனாவை ஒன்றிணைத்து, யுவான் வமிசத்தை நிறுவினார். லா மா மதத்தை மங்கோலிய இன மக்கள் நம்புகின்றனர். சீனாவின் அரசியல், ராணுவம், பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், வானியல், காலக்குறிப்பு முறை, பண்பாடு, கலை, மருத்துவம் ஆகிய துறைகளில் மங்கோலிய இனம் பெரும் பங்காற்றியுள்ளது.