சீனக் கட்டிடங்கள் பற்றிய பொது அறிவு

中国国际广播电台

தனிச்சிறப்பியல்புடைய சீனக் கட்டிடங்கள், ஒளிமயமான சீன நாகரிகத்தின் முக்கிய பகுதியாக திகழ்கின்றன. சீனக் கட்டிடக்கலை, மேற்கத்திய கட்டிடக்கலை, இஸ்லாமியக் கட்டிடக்கலை ஆகியவை உலகின் மூன்று மாபெரும் கட்டிடக்கலை பிரிவுகளாகும்.

உலகில் சீனக் கட்டிடங்கள் மட்டுமே மரச் சட்டங்களைக் கொண்டு கட்டப்படுகின்றன. இவை, சீன மக்களின் மனித உறவு அழகியல் உணர்வு, நன்மதிப்பு இயற்கை ஈடுபாடு என்ற கண்ணோட்டங்களை முழுமையாக பிரதிபலிக்கின்றன. ஆழ்ந்த பண்பாட்டு பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்ட சீனக் கட்டிடக் கலையின் முக்கிய சிறப்பியல்புகள் வருமாறுபேரரசரின் அதிகாரம்தான் முதலில் என்ற சிந்தனை, கண்டிப்பான வர்க்கக் கண்ணோட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டவாறு வெளிப்படுத்துவது, மாளிகை மற்றும் நகர வடிவமைப்புத் துறையில் அளவற்ற சாதனைகளைத் தருவது, கட்டிடங்களின் ஒருங்கிணைந்த அழகில் கவனம் செலுத்துவது, கட்டிடங்களின் நடு கோட்டின் இரு பக்கங்களிலும் சீரான அமைவு, நான்கு பக்கங்களும் வீடுகள், நடுவில் முற்றம் என்ற அமைப்புமுறை, இயற்கைக்கு மதிப்பளித்து, இயற்கையுடன் இசைவாக இருப்பதில் கவனம் செலுத்துவது, அமைதி, எளிமை, மறைமுகம், கருத்தாழம் ஆகிய பண்புகள் அடங்கிய அழகை நாடுவதற்கு முக்கியத்துவம் தருவது.

வரலாற்றில், கட்டிடக் கலையிலும், தொழில் நுட்பத்திலும் வெளிநாடுகளுடன் பரிமாற்றம் மேற்கொள்வதில் சீனா மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது. சீனக் கட்டிடக் கலையும் தொழில் நுட்பமும் ஜப்பான், வட கொரியா, வியட்நாம், மங்கோலிய முதலிய நாடுகளின் கட்டிடத்துறையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இன்று நவீன சீனாவின் கட்டிடங்கள், பாரம்பரிய பாணிகளை நிலைநிறுத்தும் அதே வேளையில் மேலை நாடுகளின் கட்டிடக் கலை சிறப்பியல்பபையும் சேர்த்து இடைவிடாமல் வளர்ந்துவருகின்றன.