தாங் வம்ச ஆட்சிக்கால கட்டிடங்கள்

中国国际广播电台

தாங் வம்ச ஆட்சிக்காலம் (கி.பி.618ஆம் ஆண்டுமுதல், 907ஆம் ஆண்டுவரை) சீனாவின் நிலப்பிரபுத்துவ சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் உச்ச நிலையில் இருந்தது. தாங் வம்ச கால கட்டிடங்கள் அளவில் பெரியவை, கம்பீரம், அகலம், நிறம் என்பன அவற்றின் சிறப்பு பாணிகளாகும்.

சீனக் கட்டிடங்களின் ஒட்டுமொத்த வரைவு தாங்வம்சாட்சிக் காலத்தில் நாளுக்கு நாள் பக்குவமடைந்தது. தாங் வம்ச ஆட்சியின் தலைநகரான சாங்ஆன் நகரிலும் (இன்றைய சீஆன் நகரம்) கிழக்கு தலைநகரமான லோயாங் நகரத்திலும் அளவில் மிக பெரிய அரசு மாளிகைகள், பூங்காகள் அதிகாரி இல்லங்கள் முதலியவை கட்டப்பட்டன. அத்துடன் கட்டிடங்களின் அமைப்பு மேலும் முறைப்படுத்தப்பட்டது. சாங்ஆன் நகரம் அப்போதைய உலகில் மிக பெரிய மாநகரமாக விளங்கியது. அதன் வரைவு மிக முழுமையானது.சாங்ஆன் நகரிலுள்ள பேரரசர் மாளிகையான தாமிங் மாளிகை மிகவும் பிரமாண்டபம். அதன் சிதிலத்தின் நிலப்பரப்பு, ச்சிங் வம்ச மற்றும் மிங் வம்சாட்சிக்காலத்திலான அரண்மனையான தடுக்கப்பட்ட நகரின் நிலப்பரப்பு போல 3 மடங்குக்கு அதிகமாகும்.

தாங் வமசாட்சிக் காலத்தில் மரங்களால் ஆன கட்டிடங்கள், கலை அம்சமும் பதனீடும் கட்டமைப்பும் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. வில் வடிவப் பகுதி, தூண், கூரை உள்ளிட்ட கட்டிடக் கட்டமைப்பின் பல்வேறு பகுதிகளும் ஆற்றல் மற்றும் அழகின் முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன. ஷான்சி மாநிலத்தின் வூ தை மலையிலுள்ள புத்த ஒளி கோயிலின் மண்டபம், தாங் வம்சாட்சியின் ஒரு மாதிரி கட்டிடமாகும்.

தவிரவும், தாங் வம்சாட்சிக்காலத்தில், செங்கல் மற்றும் கற்களால் ஆன கட்டிடங்களும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியுற்றது. புத்த கோபுரங்களில் பெரும்பாலானவை செங்கல் மற்றும் கற்களால் கட்டப்பட்டன. சீஆன் மாநகரிலுள்ள தாயன் கோபுரம், சியோ யன் கோப்புரம், தாலி நகரிலுள்ள ச்சியன் சியுன் கோபுரம் உள்ளிட்ட தற்போது சீனாவில் நிலவும் தாங் வம்ச ஆட்சிக்கால கோப்புரங்கள் அனைத்தும் செங்கல் மற்றும் கற்களால் கட்டப்பட்டவை.

சீஆன் மாநகரிலுள்ள தாயன் கோபுரம்