யுவான் வம்ச ஆட்சிக்கால கட்டிடங்கள்

中国国际广播电台

யுவான் வம்ச காலத்தில்கி.பி. 1206-1368மங்கோலிய இன ஆட்சியாளர் ஒருவர் சீனாவை, விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு இராணுவ ஏகாதிபத்திய நாடாக நிறுவினார். ஆனால் அக்காலகட்டத்தில் சீனாவின் பொருளாதாரமும் பண்பாடும் மந்தமாகதான் வளர்ந்தன. கட்டிடத் துறையும் வளர்ச்சியடையவில்லை. பெரும்பாலான கட்டிடங்கள் எளிமையாகவும் கலைநயமற்றதாகவும் இருக்கின்றன.

யுவான் வம்சாட்சியின் தலைநகரான தாதுஇன்றைய பெய்சிங் மாநகரத்தின் வடப் பகுதிமிகவும் பிரமாண்டமானது, இது, மிங் வம்சாட்சி மற்றும் சிங் வம்சாட்சியின் தலைநகரமாக திகழ்ந்தது. பெய்சிங் அப்போது தான் ஒரு நகரமாக தோற்றமளிக்கத் துவங்கியது. இன்று வரை நிலவும் யுவான் வம்ச காலத்திலான தையோச்சி ஏரியும் வான்சுய்ஷன் மலையும் இன்றைய பெய்ஹை பூங்காவிலுள்ள ச்சுங் தௌ தீவுஅப்போது புகழ்பெற்ற காட்சித் தலங்களாக விளங்கியன.

யுவான் வம்சாட்சியாளர் மத நம்பிக்கை மிக்கவர். குறிப்பாக, திபெத் புத்த மதத்தை அவர் மிகவும் நம்புகிறார். எனவே அக்காலத்தில் மதக் கட்டிடங்கள் பெரிதும் வளர்ச்சியுற்றன. பெய்சிங்கிலுள்ள மியோயிங் கோயிலுள்ள பை தா கோபுரம், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட லாமா கோபுரமாகும்.

படம்பை தா கோபுரம்