ச்சிங் வம்ச ஆட்சிக்காலக் கட்டிடங்கள்

中国国际广播电台

ச்சிங் வம்சம் கி.பி. 1616-1911சீனாவின் கடைசி நிலப்பிரப்புத்துவ வம்சாட்சியாகும். அக்காலத்தில், கட்டிடங்கள் பொதுவாக மிங் வம்சாட்சியின் பாரம்பரியத்தை ஏற்று, கட்டிடங்கள் மேலும் நுணுக்கமாகவும் அழகாகவும் கட்டப்பட்டன.

ச்சிங் வம்சாட்சியின் தலைநகரான பெய்சிங் அடிப்படையில் மிங் வம்ச ஆட்சியின் நிலைமையை நிலைநிறுத்தியது. உள்நகருக்கு மொத்தம் 20 கம்பீரமான நுழைவாயில் கட்டிடங்கள் இருந்தன. அவற்றில் செங்யாங்மன் எனும் நுழைவாயில் கட்டிடம் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரம். மிங் வம்சாட்சிக் காலத்தில் பேரரசர் மாளிகை வடிவத்தில் பெரும் அளவிலான அரச குடும்ப பூங்காக்களை ச்சிங் வம்சப் பேரரசர்கள் கட்டியமைத்தனர். அவற்றில் எழில்மிக்க யுவான்மிங்யுவானும், கோடைக்கால மாளிகையும் குறிப்பிடத்தக்கவை. அளவில் மிக பெரியவை. இக்காலகட்டத்தில் சீனாவின் கட்டிடங்களில் கண்ணாடியும் பயன்படுத்தப்பட்டது. பல்வடிவ சுயோச்சை மாதிரியுடைய குடியிருப்பு வீடுகளும் அதிகமாக காணப்பட்டன.

சிறப்புப் பாணியுடைய திபெத் புத்தமத கட்டிடங்கள் இக்காலகட்டத்தில் ஓங்கிவளர்ந்தன. இந்தப் புத்தமத கோயில்கள் பல மாதிரியாக வண்ணமயமாகவும் கட்டப்பட்டன. பெய்சிங் மாநகரிலுள்ள யுங்ஹோ மாளிகையும் ஹெப்பெய் மாநிலத்து செங்தே நகரில் கட்டப்பபட்ட பல திபெத் புத்தமத கோயில்களும் அப்போதைய புத்தமதக் கட்டிடங்களின் பாணியை சரிவர வெளிப்படுத்தியுள்ளன.

ச்சிங் வம்சாட்சியின் பிற்பாதியில் சீனாவில், சீனப் பாணியும் மேலை நாட்டுப் பாணியும் ஒன்றிணையும் புதிய கட்டிடங்களும் தோன்றின.

 

(யுங்ஹோ மாளிகை)