சீனாவின் நவீன கட்டிடங்கள்
中国国际广播电台

சீனாவின் நவீன கட்டிடங்கள், 19வது நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்பு கட்டப்பட்ட கட்டிடங்களை குறிக்கின்றன.

1840ஆம் ஆண்டு அபினி போர் மூண்டது முதல் 1949ஆம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்டது வரை, சீனாவின் கட்டிடங்கள், சீன மற்றும் மேலை நாட்டு பாணிகள் ஒன்றிணையும் பல்வகை வடிவமைப்புக்களைக் கொண்டவை. இக்காலகட்டத்தில் சீனாவின் பழைய பாரம்பரிய கட்டிடங்களின் எண்ணிகை தொடர்ந்து வளர்ந்தன. ஆனால் நாடக அரங்கம், உணவுவிடுதி, ஹோட்டல், பேரங்காடிகள் உள்ளிட்ட வணிகக் கட்டிடங்கள் பாரம்பரிய கட்டிடக் கட்டமைப்பை மாற்றி, மனிதர்களுக்கிடையில் தொடர்புக்கான இடங்களாக விரிவடைந்துள்ளன. ஷாங்கை, தியன்சின் முதலிய மாநகரங்களில் வெளிநாட்டு துணை நிலைத் தூதரகங்கள், கடை, வங்கி, ஹோட்டல், பொழுதுபோக்கு கிளப் போன்ற வெளிநாட்டு பாணி கட்டிடங்கள் தோன்றின.

1949ஆம் ஆண்டு சீன மக்கள் குடிரயரசு நிறுவப்பட்ட பின், சீனாவின் கட்டிடத் துறை ஒரு புதிய வரலாற்று காலகட்டத்தில் நுழைந்தது. இக்காலகட்டத்தில், சீனாவில் நவீன கட்டிடங்கள், எண்ணிக்கை, அளவு, வகை, பரவல் மற்றும் நவின மயமாக்கம் ஆகிய அனைத்திலும் புதிய முன்னேற்றம் கண்டு, புத்தம் புதிய தோற்றமளிக்கின்றன. 1980ஆம் ஆண்டுகளுக்குப் பின், சீனாவின் கட்டிடத் துறை படிப்படியாக வெளிநாடுகளுக்குத் திறந்துவைக்கப்பட்டு, மேலை நாட்டு பாணியை சேர்த்துள்ளது. சீனாவின் நவீன கட்டிடங்கள் பல தரப்பட்டவை என்ற திசையை நோக்கி வளர்ந்துவருகின்றன.