உயிரின சுற்றுசூழலின் தற்போதைய நிலைமை

中国国际广播电台


 தற்போதைய காடு வளர்ப்பு

கடந்த பல்லாண்டுகலாக சீனா காடுகளை பாதுகாப்பதிலும் மரம் நட்டு காடுகலை வளர்ப்பதிலும் குறிப்பிடத்திக்க சாதனைகளைப் படைத்துள்ளது. 2002 புள்ளிவிபரங்களின் படி, சீனாவில் காட்டு நிலப்பரப்பு 4 கோடியே 60 லட்சம் ஹெக்டரைத் தாண்டியுள்ளது. செய்ற்கைக்காடு வளர்ப்பு வேகமும் அதன் அளவும் உலகில் முதலாவது இடம் வகிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பசுமை நிலபரப்பு வேகமாக அதிகரித்துள்ளது. காடுகளின் பரவல் 1998ல் இருந்த 14 விழுக்காட்டிலிருந்து 2002ல் 16.55 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதன் மொத்த நிலப்பரப்பு 15 கோடியே 80 லட்சம் ஹெக்டரை எட்டியுள்ளது. சீனா தொடர்ச்சியான வளர்ச்சியை மேற்கொண்டு பசுமையான சீனாவை உருவாக்கும் நெருநோக்கு திட்டத்தின் படி, 2010ம் ஆண்டுக்குள் காடுகளின் பரவல் விகிதத்தை 20 விழுக்காட்டுக்கு மேலாக உயர்த்த சீனா பாடுபடும்

பாலைவனமயமாக்கம்

உலகில் பாலைவனமயமாக்கத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் சில பிரதேசங்களில் மணற்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் உயிரின வாழ்க்கை சூழல் உருவாக்கம் ஆகிய பணிகள் சிறப்பான பயணளித்துளான ஆனாலும் முழுமையாக பார்த்தால் அதன் மோசமாகி வரும் நிலைமை பயனுள்ள முறையில் தடுத்து நிறுத்தப்படவில்லை. நிலத்தின் தரம் குறைவதால் பாலை நிலத்தின் பரப்பளவு தொடர்ந்து விரிவடைந்து வருகின்றது. சீனாவில் பாலை நிலத்தின் மொத்த பரப்பு 17 லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 20 விழுக்காடாகும். அத்துடன் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 400 சதுர கிலோமீட்டர் என்ற வேகத்தில் விரிவடைந்து வருகிறது. தற்போது சீனாவில் சுமார் 17 கோடி மக்களின் வாழ்க்கையும் உற்பத்தியும் இதனால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக பொருளாதார இழப்பு ஆண்டுக்கு 5400 கோடி யூவானைத் தாண்டியுள்ளது என்று 1999ல் சீனாவில் நடைபெர்ற இது பற்றிய இரண்டாவது கணக்கெடுப்பு முடிவு காட்டுகிறது.

நீர் மற்றும் மண் அரிப்பு

நீர் மற்றும் மண் அரிப்பு சீனாவின் நில வளத்தைக் கடுமையாகச் சீர்குலைக்கும் நிலவியல் அழிவு மற்றும் சுற்றும் சூழல் பிரச்சினையாகும். இதில் லோயெஸ் பீடமிப் பிரதேசத்தில் இப்பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நாசமும் மிக பெரியது. சீனாவின் நீர் மற்றும் மண் அரிப்பு பற்றிய பொது நிலைமை வருமாறு. பகுதி வட்டாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கூறின், அது விரிவடைகிறது. கட்டுப்பாட்டுப் பணியாளர் சீர்குலைவு கேவகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தற்போது சீனாவில் சுமார் 3ல் ஒரு பகுதி சாகுபடி நிலம் நீர் மற்றும் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அரிக்கப்பட்ட மண் எடை 500 கோடி டன்னாகும். நாட்டின் சாகுபடி நிலத்தில் ஒரு சென்டிமீட்டர் தடிப்பான மண் அரிக்கப் படுவதற்கு இது சமமானது. அரிக்கப்பட்ட மண்ணன் ஊட்டச்சத்துக்கள் கோடி டன் கரமான வேதியியல் உரத்துக்கு சமமாகும். அதாவது சீனா ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யும் வேதியியல் உரத்தில் நைட்ரஜ பாஸ்பரஸ் பொட்டாசியம் ஆகியவற்றின் மொத்த அளவுக்கு சம்மாகும். நியாயமற்ற முறையிலான சாகுபடி முறையும் தாவர வளர்ச்சியின் சீர்குலைவும் நீர் மற்றும் மண் அரிப்புக்கு முக்கிய சாரணங்களாகும். நாட்டின் மலைப் பகுதிகளில் ஏற்படும் சாகுபடி நிலப்பரப்பு சுமார் 40 கோடி மோ ஆகும். இதில் 10 கோடி மோ படிக்கட்டு வயல்களாகும். ஏனைய 30 கோடி மோ சரிவு நிலங்கள் வெவ்வேறான அளவில் நீர் மற்றும் மண் அரிப்பால் பாதிக்கப்படுகின்றன.

சதுப்பு நிலம்

சீனாவில் சுமார் 6 கோடியே 60 லட்சம் ஹெக்டர் பரப்ளவுக்கு சதுப்பு நிலங்கள் உண்டு. இதில் ஆறுகளும் குளங்களும் சேர்க்கப்படவில்லை. உலக சதுப்பு நிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 10 விழுக்காடு வகிக்கிறது. இது ஆசியாவில் முதலிடமும் உலகில் 4வது இடமும் வகிக்கின்றது. சதுப்பு நிலத்தின் முக்கியத்துவத்தை சீனா மேன்மேலும் புரிந்து கொண்டுள்ளது. 1990ம் ஆண்டுகள் முதல் சதுப்பு நிலப்பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டில் பணியில் பல பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் சதுப்பு நிலம் ஒரளவு பாதுகாக்கப்பட்டு, அதன் உயிரின வகைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற இரட்டை நிலைமையில் மனித குலத்தின் உற்பத்தியும் வாழ்க்கையும் சதுப்பு நிலத்தை மேலும் அதிகமாகச் சார்ந்திருக்கின் உற்பத்தியும் வாழ்க்கையும் சதுப்பு நிலத்தை மேலும் அதிகமாகச் சார்ந்திருக்கின்றன. இதனால் சதுப்பு நிலமும் உயிரின வகைகளும் பொதுவாக சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 50 விழுக்காடு கடலோரப்பகுதி மணல் சதுப்பு நிலங்கள் கானாமல் போயின. நாட்டின் சுமார் 13 விழுக்காடு ஏரிகளும் இல்லாமல் போயிவிட்டன. ஹொலொங் ஆற்றின் மூன்று சமவெளிப்பகுதிகளில் 78 விழுக்காடு இயற்கை சதுப்பு நிலங்கள் அழிந்துவிட்டன. ஹொங் ஹு ஏரியில் 24 நீர் வாழ் தாவரங்களின் வகைகளும் 50 மீன் வகைகளும் குறைந்துவிட்டன. சதுப்பு நில வளத்தின் சீர்குலைவினால் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் குடி மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் சதுப்பு நிலம் மற்றும் அதன் உயிரின வகைகளின் பாதுகாப்பு, சீன அரசாங்கமும் பொது மக்களும் அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினையாக திகழ்கின்றது