சுற்றுசூழல் பாதுகாப்பு

中国国际广播电台

 

கடந்த சில ஆண்டுகளாக சீன அரசு பல முக்கியமான மாசுக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை உறுதிப்படுத்தி நீர்மாசு ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டம் நிரவாக கொள்கை கழிவுப் பொருட்களின் வெளியேற்ற அளவு கட்டுப்பாட்டு கொள்கை ஆகியவற்றை வகுத்த நடைமுறைப்படுத்தியுள்ளது. 2002ம் ஆண்டு இறுதி வரை யாங்சி ஆற்றின் மூன்றுலை பள்ளத்தாக்கு அணைப்பகுதியில் சுற்று சூழல் பாதுகாப்புக்காக அரசு 4 ஆயிரம் கோடி யூவான் முதலீடு செய்துள்ளது. 2001ம் ஆண்டு இப்பிரதேசத்தின் முக்கியமான மாசடையும் தலங்களின் எண்ணிக்கை 37 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடும் தூய்மை கேட்டை ஏற்படுத்தும் 60 தொழிற்சாலைகளின் கழிவு நீர் வெளியேற்ற அளவு 2000ம் ஆண்டில் இருந்ததை விட 15.6 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

பல்வகை தூய்மை கேட்டுப் பொருட்களின் மொத்த வெளியேற்ற அளவு 0.8 டன்னாகும். இவற்றில் வேதியியலுக்கு தேவையான வெளியேற்றத்தின் அளவு 2000யில் இருந்ததை விட 48.3 விழுக்காடு குறைவாகும். மாசு அதிகமாக உள்ள தைய் ஹூ ஏரி பள்ளத்தாக்குப் பகுதியில் மாசடைவது 2002ம் ஆண்டு சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது. அதாவது யாங்சி ஆற்றிலிருந்து 36,900 சதுர கிலோமீட்டரர் பரப்பளவுடைய இந்த நன்னீர் ஏரிக்கு தூய்மையான ஆற்று நீர் அனுப்பப்பட்டது. இத்திட்டப்பணி தைஹூ ஏரி பள்ளத்தாக்கு பிரதேசத்தில் நீரின் தரத்தை தெளிவாக மேம்படுத்தியுள்ளது. இதனால் ஏரி நீரிலுள்ள முக்கிய மாசுப் பொருட்களான பாஸ்பரஸ் நைட்ரஜன்

முலியவற்றின் படிவங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட முறையே 56 விழுக்காடும் 25 விழுக்காடும் குறைந்துள்ளன. தைஹூ ஏரி நீரை, நீர் ஆதாரமாகக் கொண்ட ஷங்காய் உள்ளிட்ட மாநகரங்களின் குழாய் நீரின் தரமும் தெளிவாக மேம்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி மக்கள் இதனால் நன்மை பெற்றனர்.

இதற்கிடையில் சீனாவில் காற்று தரத்தின் மீதான கண்கானிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியும் பொதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2002ல் நாட்டின் நகரங்களிலுள்ள காற்றுத் தரம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. சுற்று சூழல் பாதுகாப்பு குறைகள் கண்காணித்து அளவீடு செய்த 339 நகரங்களில் 117 நகரங்கள் நாட்டின் இரண்டாவது நிலை காற்று தரத்தை எட்டியுள்ளன அல்லது தாண்டியுள்ளன. இவற்றில் கைய்கோ சான்யா சௌ சிங் உள்ளிட்ட 10 நகரங்கள் முதலாவது நிலை காற்று தரத்தை எட்டியுள்ளந. பெய்சிங்கில் காற்று கட்டுப்பாட்டுப் பணியிலும் தெளிவாக பயன் கிடைத்துள்ளது. 2002ல் நகரப்பிரதேசம் இரண்டாவது நிலை காற்றுத்தரத்தை எட்டிய அல்லது அதை தாண்டிய நாட்கள் 201 ஆகும். இது 2001இல் இருந்ததை விட 19 நாட்கள் அதிகமாகும். நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மோட்டார் வாகனங்களின் புகை வெலியேற்றம் ஐரோப்பா இலக்கம் ஒன்று என்ற எட்டியுள்ளன. பெய்சிங் உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஐரோப்பா இலக்கம் 2 என்ற வரையறை நடைமுறைக்கு வந்துள்ளது.