வன வள பாதுகாப்பு

中国国际广播电台

 

கடந்த 50ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்து சீனா இயற்கை காடு வளர்ப்பு என்ற உலக அற்புதத்தை உருவாக்கியுள்ளது. 1981ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை சீனாவில் உழைப்பு தான் மர நடும் இயக்கத்தின் மூலம் 3980 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது செயற்கை காட்டின் நிலப்பரப்பு 4 கோடியே 66 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டராகும். இது உலக செயற்கை காட்டின் நிலப்பரப்பில் 26 விழுக்காடு ஆகும்.

இது உலகில் முதலிடம் பெறுகின்றது. காட்டு உறைவிடம் 16.55 விழுக்காடாகும். உலக காட்டு வளம் குறைந்து வரும் போக்கில் சீனாவில் காட்டு நிலப்பரப்பு அளவு அதிகரித்துள்ளது. உலகில் காடுகள் மிகவும் அதிகமாக உள்ள 15 நாடுகளில் ஒன்றாக சீனாவை ஐ நாவின் சுற்று சூழல் அலுவலகம் சேர்த்துள்ளது.

1998ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை நடுவன் அரசு ஏழைகள் செறிந்திருக்கும் மத்திய மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கென 4270 கோடி யூவான் முதலீடு செய்துள்ளது. இப்பிரதேசத்தின் செடி கொடிகளின் பாதுகாப்பு உள்ளூர் விவசாயிகளுக்கான மானியம், அளவுக்கு மீறி பயிர் செய்த வயல்களை மீண்டும் காடுகளாகவும் புல்வெளியாகவும் மாற்றுவதற்கான திட்டப்பணிக்கு ஊக்கமளிப்பது ஆகியவற்றுக்கு இது பயன்படும். சாகுபடி நிலத்தை மீண்டும் காடாக்கும் திட்டப்பணி, நாட்டின் 25 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் நடுவன் அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகரங்களில் பரந்தளவில் நடைமுறைக்கு வந்துள்ளது. 2002ம் ஆண்டு வரை சுமார் 64 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்புடைய சாகுபடி நிலங்கள் மீண்டும் காடுகளாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 31 லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டர் நிலம் காடுகளாக்கப்பட்டுள்ளது. மரம் நடுவதற்கு ஏற்ற தரசு மலைகளிலும் நிலங்களிலும் 32 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவுக்கு காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. இப்பணி

துவக்க நிலையிலேயே பயன் தந்துள்ளது. ஒரு பகுதி பிரதேசங்களில் வெல்ளப் பெருக்கு மற்றும் மண் அரிப்பு குறிப்பிட்ட அளவில் கட்டுப்பட்டுள்ளது. இதனிடையில் 1998ம் ஆண்டு துவங்கிய இயற்கை காடுகளின் பாதுகாப்பு திட்டப்பணியானது, காட்டு வளத்தைப் பயன் தரும் முறையில் பாதுகாப்பதற்கான மற்றொரு நடவடிக்கை ஆகும். நாடு முழவதும் இயற்கை காடுகளை வெட்டுவதை நிறுத்த வேண்டும் என்று இத்திட்டப்பணி கோருகின்றது. பல பிரதேசங்களில் அப்போதைய மரம் வேட்டும் தொழிலாளர்கள் இப்போது காடுகளைப் பாதுகாக்கும் பணியாளர்களாக மாறியுள்ளனர்.

சீனாவின் தொடர்ச்சியான வனத் தொழில் வளர்ச்சியின் நெருநோக்கு ஆய்வு அறிக்கை விதித்த இலக்கின் படி, 2050 ஆண்டுக்குள் சீனாவின் காட்டுப் பகுதி 28 விழுக்காட்டை எட்டும்.