பாலைமயமாக்கத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

中国国际广播电台


       நிலம் தரிகாவது சீனாவின் மிக கடுமையான உயிரின வாழ்க்கை சூழல் பிரச்சினைகளில் ஒன்றாகும். நாட்டின் 26 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு நிலம் நாட்டின் மொத்த சாகுபடி நிலப்பரப்பை பெரிதும் தாண்டியுள்ளது. இது நாட்டின் நிலப்பரப்பில் சுமார் 27 விழுக்காடாகும். தற்போது பாலைவனமாக்கம் ஒரு பகுதி பிரதேசத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் ஆண்டுதோறும் அது 3000 சதுர கிலோமீட்டர் என்ற வேகத்தில் விரிவடைந்து வருகின்றது.

சீன அரசு வனத் தொழில் மனல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தை செய்ல்படுத்த துவங்கியுள்ளது. 2010ம் ஆண்டிற்குள் பாலைவனமயமாக்கம் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்படும். 2030 ஆண்டிற்குள் ஏற்கனவே சாதித்த கட்டுப்பாட்டுச் சாதனையில் அடிப்படையில் தரிசு நிலத்தின் மொத்த பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து வருகின்றது. 2050ம் ஆண்டிற்குள் அப்போதைய பொருளாதார தொழில்நுட்பத்திற்கே தரிசு நிலம் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவ்வாரு இறுதியில் பாலைவனமயமான பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் முழுமையான உயிரின வாழ்க்கை அமைப்பு முறையை உருவாக்க வேண்டும்.