சுற்றுசூழல் பாதுகாப்பின் குறிகோள்

中国国际广播电台


 2005ம் ஆண்டு வரை சுற்றுசூழல் மாசு நிலைமை ஓரளவு குறைந்து, உயிரின சூழல் மோசமாகி வரும் போக்கு அடிப்படையில் கட்டுபடுத்தப்பட்டு, நகர மற்றும் கிராமப்புறத்தின் சுற்றுசூழல் தரம், குறிப்பாக பெரிய மற்றும் நடுத்தர நகரங்களிலும் முக்கிய பிரதேசங்களிலும் சூழல் தரம் மேம்படுத்தப்பட்டு, சோஷிலிச சந்தை பொருளாதார அமைப்பு முறைக்கு பொருந்திய சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் கொள்கை நிர்வாக அமைப்பு ஆகியவற்றை வகுப்பது என்பது சீனா உறுதிப்படுத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு திட்டமாகும்.

சீனாவின் பத்தாவது ஐந்தைந்து திட்டத்திலான சுற்றுசூழல் பாதுகாப்பு குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், இக்காலத்தில் நாடு முழுவதும் சூழல் பாதுகாப்பு துறையில் 70000 கோடி யுவான் முதலீடு செய்ய வேண்டும். இத்தொகை, மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.3 விழுகாடாக இருக்கும்.