சர்வதேச சுற்றுசூழல் பற்றிய ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம்

中国国际广播电台

மிக பெரிய வளரும் நாடும், பெரிய சுற்றுசூழல் நாடுமான சீனா, சர்வதேச சுற்றுசூழல் அரங்கில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. சுற்றுசூழல் பற்றிய சர்வதேச நடவடிக்கைகளில் சீனா ஆக்கபூர்வமாக கலந்து கொண்டு, உலக சுற்றுசூழலிலும் வளர்சசியிலும் ஆக்கபூர்வமாக பங்கை ஆற்றியுள்ளது

1972ம் ஆண்டு, ஸ்டாக்ஹோம் முதலாவது மனித குலத்தின் சுற்றுசூழல் மாநாடு நடைபெற்றது. சீன அரசு பிரதிநிதியை அனுப்பி இம்மாநாட்டில் கலந்துக் கொண்டது. 1992ம் ஆண்டு லியோன்ஜெனெரோவில் நடைபெற்ற சுற்றுசூழல் மற்றும் வளர்ச்சி உச்சி மாநாட்டில், சீனாவின் அப்போதைய தலைமை அமைச்சர் லீபெங் பிரதிநிதி குழுவுக்கு தலைமை தாங்கி கலந்துக் கொண்டார். அத்துடன், கால நிலை மாற்றம் கட்டுகோப்பு பொது உடன்படிக்கை மற்றும் பல்வகை உயிரினச்சூழல் பாதுகாப்பு பொது உடன்படிக்கையில் அவர் முதலில் கையொப்பமிட்டார். உலக சமூகம் இதை உயர்வாக மதிப்பிட்டது. 2002ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள், சீன தலைமை அமைச்சர் சூழங்ச்சி, சீனாவின் பிரதிநிதி குழுவுக்கு தலைமை தாங்கி, ஜோகனஸ்பர்கில் பேரில் நடைபெற்ற தொடர்ச்சியான வளர்ச்சி உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டார். கியோடோ உடன்படிக்கையை சீன அரசு ஏற்றுக் கொண்டது. உலக சமூகம் இதை பெரிதும் பாராட்டியுள்ளது.

சர்வதேச சூழல் மாநாடு மற்றும் சர்வதேச பொது உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தையில், உலக சுற்றுசூழலை பேணிகாப்பதில் சீனா எப்போதும் உறுதியாக நிற்கிறது. வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்குமிடையில் பொதுவான ஆனால் வேறுப்பட்ட பொறுப்புகள் இருக்கும் என்ற கொட்பாட்டிற்கு இணங்க வளரும் நாடுகளின் பக்கத்தில் சீனா உறுதியாக நிற்கிறது. சுற்றுசூழல் துறையிலான மேலாதிக்கவாதத்தை எதிர்க்கிறது. சுற்றுசூழல் பிரச்சினை என்ற சாக்குப்போக்கில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை எதிர்க்கிறது. வரலாற்றையும் உண்மை நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு, வளர்ந்த நாடுகள், தற்போதைய சுற்றுசூழல் பிரச்சினைக்கு முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டும் வளரும் நாடுகளோ, இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ஏற்கனவே, வளர்ந்த நாடுகள் முதலாக கடமையுடன் நடவடிக்கை மேற்கொண்டு சூழலை பாதுகாக்க வேண்டும். தவிர, உலக சுற்றுசூழல் பாதுகாப்பில் வளரும் நாடுகள் கலந்துக் கொள்வதற்கு வளர்ந்த நாடுகள் உதவி வழங்க வேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளின் அரசு சார்பற்ற நிறுவனங்கள், எடுத்துக்காட்டாக, உலக இயற்கை நிதியம், சர்வதேச விலங்கு பாதுகாப்பு நிதியம் ஆகியவை, சீனாவின் தொடர்புடைய வாரியங்களுடனும் அரசு சார்பற்ற நிறுவனங்களுடனும் ஒத்துழைப்பு மேற்கொண்டு செயலாக்க சாதனை பெற்றுள்ளது.

உலகில், சீன சுற்றுசூழல் மற்றும் வளர்ச்சி பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு கமிட்டி எனும் அமைப்பை சீனா முதலில் ஏற்படுத்தியது. அரசாங்கத்தின் உயர் நிலை ஆலோசனை நிறுவனமான இக்கமிட்டியில் 40க்கு அதிகமான உலக புகழ்பெற்ற பிரமுகர்களும் வல்லுநர்களும் இடம் பெறுகின்றனர். இக்கமிட்டி உருவாக்கியுள்ளனர். நிறுவப்பட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக, இக்கமிட்டி, சீன அரசாங்கத்துக்கு பல உருப்படியான முன்மொழிவுகளை அது முன்வைத்துள்ளது. இதை சர்வதேச சுற்றுசூழல் ஒத்துழைப்பின் முன்மாதிரியாக உலக சமூகம் அழைத்தது.