சீனாவும் மான்ட்ரியல் உடன்படிக்கையும்

中国国际广播电台
 

கடந்த 10 ஆண்டுகளாக, ஒசோன் மண்டல பாதுகாப்பு பற்றிய பல்வேறு சர்வதேச நடவடிக்கைகளில் சீனா கலந்து கொண்டுள்ளது. 1986ம் மற்றும் 1987ம் ஆண்டு, ஒசோன் மன்டல பாதுகாப்பு பணி கூட்டத்திலும் உடன்படிக்கை பற்றிய கையொப்பமான கூட்டத்திலும் கலந்து கொள்ள தனித்தனியாக சீன அரசு பிரதிநிதிகளை அனுப்பியுள்ளது. அத்துடன் அதன் முதலாவது கூட்டத்தில், ஒசோன் மண்டல பாதுகாப்பு பற்றிய பல தரப்பு நிதியத்தை நிறுவுவது எனும் கருத்துருவை சீனா முன்வைத்துள்ளது. 1990ம் ஆண்டு, அதன் சீர்த்திருத்த பணியில் சீனா பல்வேறு உலக நாடுகளுடன் ஈடுபட்டுள்ளது. 1991ம் ஆண்டு, உடன்படிக்கை பற்றிய லண்டனின் திருத்த உடன்படிக்கையில் சீனா சேர்ந்தது. 1992ம் ஆண்டு, ஒசோன் மன்டலை பொருட்களை மெல்லமெல்ல நீக்கும் அரசாங்க திட்டம் என்பதை சீனா முதலில் முன்வைத்துள்ளது. 1993ம் ஆண்டு, சீன அரசரவையும் பல தரப்பு நிதியமும் இதை ஏற்றுக் கொண்டன.

இது வரை, உலக வங்கி, ,நா வளர்ச்சி திட்ட அலுவலகம் ஐ நாவின் தொழிற்துறை மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஐ நாவின் சூழல் திட்ட அலுவலகம் ஆகிய 4 அமைப்புக்களும், அமெரிக்கா. கனடா, ஜெர்மனி. டென்மார்க் முதலிய நாடுகளின் மூலம், பல தரப்பு நிதியத்துக்கு விண்ணப்பம் செய்து, 156 நிகழ்ச்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பல தரப்பு நிதியத்தின் நிதி,10 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவேறினால் ஒசோன் மண்டல சூழலை பாதிக்கும் பொருள், 31 ஆயிரத்து 800 டன்னாக குறைக்கப்படும்.