பாடம் 1 சந்திப்பு

 CRIயுடன் பேசுக
 

சில நேரங்களில் நீ ஹாவ் என்பதற்கு பதில் நின் ஹாவ் என்று சிலர் வணக்கம் கூறுவர். பொதுவாக நீ ஹாவ் என்பது சம வயதுடையோர் அல்லது சம தகுநிலையோருக்கு வணக்கம் சொல்லும்போது பயன்படுத்தப்படுகிறது. நம்மை விட மூத்தோரை சந்திக்கும்போது நின் ஹாவ் என்று சொல்வதே முறை. நின் ஹாவ் என்பது நீ ஹாவ் என்று சொல்லும் வணக்கத்தை மதிப்போடு, மரியாதையோடு சொல்வதாகும்.