சீனாவின் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி

2017-08-23 14:55:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி

எரியாற்றல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உயிர் நாடியாகும். கடந்த 5   ஆண்டுகளாக, புதிய எரியாற்றலை சீனா பெரிதும் வளர்த்து, பயன்படுத்தி, தூய்மையான,   கரிகுறைந்த எரியாற்றலுக்கான மாற்றத்தை விரைவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம்,   சீனாவின் பொருளாதார அதிகரிப்புத் தரம் இடைவிடாமல் மேம்பட்டுள்ளது. அதனுடன் மக்கள்   மேலதிக பயன்களைப் பெற்று வருகின்றனர்.
நாள்தோறும் காலை, பெய்ஜிங் நகரவாசியான   சாங் அம்மையார், பகிர்வு மிதிவண்டியின் மூலம் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர்   தூரத்திலுள்ள தரைக்கடி தொடர்வண்டி நிலையத்துக்கு செல்கிறார். அதற்குப் பிறகு,   சுரங்க பாதையின் மூலம், வேலைக்கு பயணிக்கிறார். அவர் கூறுகையில்,  

சீனாவின் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி

முதலாவதாக, பகிர்வு போக்குவரத்து மிகவும் வசதி. செல்லிடப்பேசியின் மூலம் QR   குறியீடை வருடி செய்து, மிதிவண்டியைப் பயன்படுத்த முடியும். இரண்டாவதாக, செலவு   மிகவும் குறைவு, ஐந்து ஜியாவ் அல்லது ஒரு யுவானை போதும். மூன்றாவதாக மிதிவண்டியைப்   பயன்படுத்துவது ஓர் உடற்பயிற்சி. மேலும், போக்குவரத்து நெரிசல் பற்றி கவலைப்பட   தேவையில்லை என்று கூறினார்.
இவ்வாண்டின் மே திங்கள் வரை, சீனாவின் பல்வேறு   இடங்களில் செயலுக்கு வந்துள்ள பகிர்வு மிதிவண்டிகளின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும்   மேலாகும். அவற்றின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது.   இணையம் பிளஸ்(plus) தூய்மையான போக்குவரத்து வழியில், நடமாட்ட எரியாற்றல் முக்கிய   பங்கு ஆற்றியுள்ளது. ஒரு வகை மிதிவண்டியில்மெல்லிய தகுடுகளால் ஆன சூரிய ஆற்றல்   மின்கலம் பொருத்தப்பட்டுள்ளது. மிதிவண்டி பூட்டிலுள்ள GPSக்கு தூய்மையான எரியாற்றலை   இது இடைவிடாமல் வழங்கும்.
போக்குவரத்துத் துறையிலும், கொள்கைகளின் ஆதரவுடனும்,   தொழில் நுட்பத்தின் வளர்ச்சியுடனும், சீனாவின் புதிய எரியாற்றல் வாகனத் துறை   மென்மேலும் விரைவாக வளர்ந்து வருகிறது. புள்ளிவிபரங்களின்படி, 2016ஆம் ஆண்டு,   சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கையும், விற்பனை   எண்ணிக்கையும் 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளன. உலகில் இது முதலிடம் வகிக்கிறது.   எண்ணெய் பயன்படுத்தும் வாகனத்துடன் ஒப்பிடுகையில், மின்சாரத்தைப் பயன்படுத்தும்   வாகனங்கள் கரியமில வாயுவை வெளியிடுவதில்லை.
தற்போது, எரியாற்றலைச்   சிக்கனப்படுத்தும் மதிப்பு மற்றும் சோதனையை சீனா வலுப்படுத்தி, எரியாற்றலுடன்   தொடர்புடைய சட்டத்தை மேம்படுத்தி வருகிறது. உற்பத்தி வழிமுறையை தூய்மையாக்கி,   தூய்மையான, கரிகுறைந்த நுகர்வு வழிமுறையை உருவாக்குவதை இவை வெளிக்காட்டுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்