உலகில் எரியாற்றலைச் சிக்கனப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றிய சீனா

2017-08-23 15:17:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017-ஆம் ஆண்டு சீன எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் வாரம் என்ற நிகழ்ச்சியும், கரி குறைந்த தேதி நிகழ்ச்சியும், ஜுன் 11-ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கின. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் ட்சாங் யொங் துவக்க விழாவில் கூறுகையில், தற்போது, எரியாற்றல் மீதான சீனப் பொருளாதார வளர்ச்சியின் சார்பளவு தெளிவாகக் குறைந்துள்ளது. அடுத்த கட்டத்தில், தூய்மையுடன் உற்பத்தி வழிமுறையை முன்னேற்றி, கரி குறைந்த நுகர்வு மாதிரியை சீனா உருவாக்கும் என்றார்.

2005முதல் 2016ஆம் ஆண்டு வரை, சீன உற்பத்திக்கான எரியாற்றல் செலவு மொத்தம் 37.3விழுக்காடு குறைந்தது. 180கோடி டன் நிலக்கரி சிக்கனப்படுத்தப்பட்டது. கரியமில வாயு வெளியேறும் அளவு 400கோடி டன் குறைந்ததற்கு இது சமமாகும். இந்தக் காலத்தில், உலகில் எரியாற்றலைச் சிக்கனப்படுத்துவதற்காக மிகப் பெரிய பங்காற்றிய நாடு சீனா தான். உலகின் கரி குறைந்த வளர்ச்சி முறையின் மாற்றத்துக்கு சீனா முக்கிய பங்காற்றி வருகின்றது என்று ட்சாங் யொங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்