மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் இயங்கும் தொடர்வண்டிச் சேவை

2017-08-21 16:41:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் இயங்கும் தொடர்வண்டிச் சேவை

வரும் செப்டம்பர் 21ஆம் நாள் முதல், சீனாவில் தொடர்வண்டிச் சேவை இயங்கும் புதிய   திட்டம் நடைமுறைக்கு வரும். சில இருப்புப் பாதைகளில் இயங்கும் பயணியர் மற்றும்   சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்   மாநகரங்களுக்கிடையே வந்துச் செல்லும்'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி,   மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்துடன் இயங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், உலகளவில்   மிக வேகமாக இயங்கும் வணிக ரீதியான தொடர்வண்டி சேவையை சீனா கொண்டுள்ளது என்பது   குறிப்பிடத்தக்கது.
மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் ஓடினால், பெய்ஜிங்-ஷாங்காய்   இடையேயான பயண நேரம் சுமார் 4.5 மணி நேரமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்