தனிச்சிறப்பு மிக்க சோ நிங் தேயிலை

சக்திவேல்&மீனா 2017-11-14 09:08:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தனிச்சிறப்பு மிக்க சோ நிங் தேயிலை

ஃபூஜியன் மாநிலத்தில் உள்ள சோ நிங் மாவட்டத்தில்உள்ள ஹாய் வூ தொழிற்சாலை மற்றும் சூ ஜி சான் தேயிலை பண்பாட்டு சுற்றுலாத்தளம் இந்தமாநிலத்தில் புகழ் மிக்கது ஆகும். ஹாய் வூ தேயிலை தொழிற்சாலைஇங்குள்ள தொழிற்சாலைகளில் பழமையானதும் புகழ்மிக்கதும் ஆகும். இந்த மலைப்பிரதேசத்தில் செழித்துவளரக்கூடிய பசுந்த் தேயிலைகளை பறித்து அதை நன்றாக உலர்த்தி நேர்த்தியான முறைகளில் அதைதயாரித்து விற்பனை செய்கின்றார்கள்.

தனிச்சிறப்பு மிக்க சோ நிங் தேயிலை

இந்த தேயிலையினை சுவை தனிச்சிறப்புமிக்கதாகவிளங்கிட காரணம் என்ன என்று கேட்கும் போது நமக்கு கிடைத்த விடை, இங்கு நிலவும் தட்பவெப்ப சூழ்நிலையால் தான் இங்குவிளையும் தேயிலையின் சுவை தனிச்சிறப்பாக விளங்குவதாக இந்த தொழிற்சாலையின் மேலாளர் தெரிவித்தார். பசுமையாக பறிக்கப்படும் தேயிலைநன்றாக பக்குவம் பிரிக்கப்பட்டு முதல் நிலையில் சுத்தப்படுத்தி இரண்டாம் நிலையில் அதைஅரைத்து மூன்றாம் நிலையில் சிறிது வெப்படுத்தி பிறகு விற்பனைக்கு அழகிய முறையில் பாதுகாப்பாய்அதை பொட்டலம் கட்டி விற்கிறார்கள். இந்த தேயிலை தொழிற்சாலையின்விற்பனை பல வெளி நாடுகளிலும் சிறப்பு வரவேற்பு பெற்றுள்ளதை அங்குள்ள புகைப்படங்களும்வாடிக்கையாளர்களின் புகைப்படங்களும் நமக்கு கோடிட்டுக் காட்டுகின்றன.

தனிச்சிறப்பு மிக்க சோ நிங் தேயிலை

மேலும் செழிப்பான வளர்ச்சியைப்பெற்று ஒங்கி வளர வாழ்த்தி விடைபெற்றோம், தொடர்ந்து சீன வானொலிசெய்தியாளர் குழு சூ ஜி யான் தேயிலை பண்பாட்டு சுற்றுலா தளத்தை பார்வையிட்டது. அங்கு தேயிலையின் வாசனையோடுதேயிலை தோட்டத்திற்கு நடுவே பிரமாண்ட கண்ணாடிப் பாலமும் பல சாகச விளையாட்டுகளும் கொண்டசுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள்தேயிலையைப் பார்த்து வாங்குவதோடு இங்குள்ள இந்த சுற்றுலா இடங்களையும் பார்த்து புத்துணர்ச்சிபெறுவார்கள் என்றால் மிகையல்ல

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்