டிராகன் படகு விழா (துவான்வு விழா )

மதியழகன் 2018-06-17 18:39:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வரும் ஜுன் 18ஆம் நாள் திங்களன்று சீனாவில் டிராகன் படகு விழா (துவான்வு விழா ) கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம், சீன மக்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த படத்தொகுப்பின் மூலம் டிராகன் படகு விழாவை அறிந்து கொள்ளுங்கள்.

டிராகன் படகு விழா (துவான்வு விழா )

சுருக்கம்:டிராகன் படகு விழா அல்லது துவான்வு விழா

சீன எழுத்து:端午节 பின்யின் முறை: duān  wǔ jié

துவான்வு விழா, சீன சந்திர-சூரிய நாட்காட்டியின் படி 5-ஆவது மாதத்தின் 5-ஆவது நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.  சீன வரலாற்றில் பிரபல கவிஞர் “ச்சியு யுவான்” என்பவரை நினைவு கூரும் வகையில் இந்த விழா தோற்றுவிக்கப்பட்டது என பரவலாகக் கருதப்படுகிறது.

சீன வசந்த விழா(சீனப் புத்தாண்டு), ச்சிங்மிங் விழா,  நிலா விழா(நடு இலையுதிர்கால விழா) மற்றும் துவான்வு விழா ஆகியவை, சீனாவில் மிக முக்கியமான நான்கு பாரம்பரிய விழாக்களாகும்.

டிராகன் படகு விழா (துவான்வு விழா )

முக்கிய வரலாற்றுச் சுவடுகள்

தற்போது வரை, 2000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட டிராகன் படகு விழாவைக் கொண்டாடுவது வழக்கமாகும்.

2006ஆம் ஆண்டு மே மாதம், சீனத் தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில், டிராகன் படகுத் திருவிழா சேர்க்கப்பட்ட்டது.

 2008ஆம் ஆண்டு முதல், பாரம்பரிய சீன விடுமுறை தினங்களில் இத்திருவிழா ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு செப்டம்பர்,  சீனாவின் டிராகன் படகுத் திருவிழாவை  உலக பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்க யுனேஸ்கோ அமைப்பு ஒப்புக் கொண்டது.

டிராகன் படகு விழா (துவான்வு விழா )

முக்கிய கொண்டாட்டம் மற்றும் பழக்க வழக்கங்கள்

படகு ஓட்டப் போட்டி

“சோங் ட்சி”(zong zi)எனும் சிறப்பு உணவு வகையை தயாரித்து சாப்பிடுதல்

வீட்டில்  “மருக்கொழுந்து” இலைகளை தொங்க விடுதல்

உடலில் “சியாங் பாவ்” (xiang bao)எனும் சிறு பையைக் கட்டிக் கொள்ளல்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்