72ஆவது ஐ.நா பேரவைக் கூட்டத்தொடர் துவக்கம்

2017-09-13 14:15:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

72ஆவது ஐ.நா பேரவைக் கூட்டத்தொடர் துவக்கம்

72ஆவது ஐ.நா பேரவையின் கூட்டத்தொடர் செப்டம்பர் திங்கள் 12ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் துவங்கியது. மனித முதன்மை, தொடரவல்ல வளர்ச்சியடையும் உலகில், மனித குலத்துக்கு அமைதியையும், அருமையான வாழ்க்கையையும் உருவாக்குவது நடப்பு ஐ.நா பேரவைக் கூட்டத்தொடரின் தலைப்பாகும். புதிதாகப் பதவி ஏற்ற 72ஆவது ஐ.நா பேரவைத் தலைவர் மிரோஸ்லாவ் லாஜாக், ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தொடரின் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு உறுப்பு நாடுகளுடன் நெருக்கமான தொடர்பை நிலைநிறுத்தி, 72ஆவது ஐ.நா பேரவை தொடர்பான பணிகளைப் பயனுள்ள முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று லாஜாக் தெரிவித்தார். அவர் கூறியதாவது

72ஆவது ஐ.நா பேரவைக் கூட்டத்தொடரின் போது, தலைமைச் செயலாளர் குட்ரெஸுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மேற்கொள்வதை எதிர்பார்க்கின்றேன். தலைமைச் செயலாளர் முன்வைத்த மேலும் தலைசிறந்த ஐ.நாவை உருவாக்குவதன் மூலம் மேலும் அருமையான உலகத்தை உருவாக்குவதென்ற ஆலோசனையை ஆதரிப்பதில் ஐ.நா பேரவை முக்கியப் பங்காற்றும். பவ்வேறு உறுப்பு நாடுகளுடன் நெருக்கமான தொடர்பு மேற்கொள்ள எதிர்பார்க்கின்றேன். இந்நாடுகளின் கருத்துக்கள், எமது குழுவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார் அவர்.

மனிதரை முதன்மையாகக் கொள்வது, பல்வேறு தரப்புகளின் நலன்களைச் சமப்படுத்துவது, பணிகளின் தரம் மற்றும் வெளிப்படைத் தன்மையை உயர்த்துவது உள்ளிட்ட மூன்று துறைகளில் நடப்பு ஐ.நா பேரவை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மிரோஸ்லாவ் லாஜாக் தெரிவித்தார். தவிர, ஐ.நா சீர்திருத்தம் பற்றிய விவாதம், நடப்பு ஐ.நா பேரவையின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய அம்சமாகும். ஐ.நா சீர்திருத்தத்தை ஆழமாக்கி, ஐ.நா பேரவையின் பணிகளை, காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பிரதிநிதிக்குழுவுக்குத் தலைமை தாங்கி, நடப்பு ஐ.நா பேரவைக் கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் கலந்து கொள்வார். தற்போதைய சர்வதேச நிலைமை, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் ஆகியவை பற்றி சீனாவின் நிலைப்பாட்டையும், கருத்துக்களையும் அவர் விவரிப்பார். ஐ.நாவின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து, உலகின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்து, வளர்ச்சி மற்றும் செழுமையை விரைவுபடுத்துவதில் சீனாவின் மனவுறுதியை அவர் வெளிப்படுத்துவார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்