சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

கலைமணி 2017-11-09 16:44:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

9ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்புக்கு பெரிய வரவேற்பினைக் கொடுத்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை, நிறைய சாதனைகளை பெற்றுள்ளது என்று ஷி ச்சின் பிங் தெரிவித்தார்.

நாங்கள் இருவரும், சீன-அமெரிக்க உறவு, கூட்டாக கவனம் செலுத்துகின்ற சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து ஆழமாக கருத்துகளைப் பரிமாறி கொண்டு, எதிர்காலத்தில் இரு நாட்டுறவின் வளர்ச்சியை ஆழமாக விவாதித்து, பல புதிய பொது கருத்துகளை எட்டினோம். டிரம்பின் சீன பயணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகரமான பயணமாக இருப்பதாக ஷி ச்சின் பிங் தெரிவித்தார்.

புள்ளிவிபரங்களின் படி, கடந்த 30 ஆண்டுகாலத்தில், சீன-அமெரிக்க வர்த்தக தொகை, 200 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இரு நாட்டு பொருளாதார வர்த்தக உறவு, சீன-அமெரிக்க உறவின் அடிப்படையாக மாறி, இரு நாட்டுறவுக்கு துணை புரியும். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிக் குழுவில், 29 அமெரிக்க தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இப்பயணக்காலத்தில், 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வணிக வர்த்தக முதலீட்டு உடன்படிக்கைகளில் இருத்தரப்பும் கையொப்பமிட்டன. செய்தியாளர்களுக்கு ஷி ச்சின் பிங் கூறியதாவது—

உலகில் மிக பெரிய பொருளாதார நாடாகவும், உலக பொருளாதார வளர்ச்சிக்கு தலைமை தாங்கும் நாடாகவும், இரு நாடுகள், வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளை விரிவாக்கி, ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு பொருளாதார வர்த்தக உறவு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று ஷி ச்சின் பிங் தெரிவித்தார்.

பொருளாதார வர்த்தக பிரச்சினையைத் தவிர்த்து, கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு தலைவர்கள் விவாதித்தனர். முக்கியமான சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சனைகள் குறித்து பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதற்கும் சில சூடான பிரச்சினைகளின் தீர்வில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இருத்தரப்பினரும் ஒப்புகொண்டுள்ளனர்.

உலகின் அமைதியையும் பாதுகாப்பையும் செழுமையையும் முன்னேற்றுவதற்கு அமெரிக்காவும், சீனா உள்ளிட்ட இதர கூட்டாளிகளும், மிக பெரிய வாய்ப்புகளைக் கொள்கின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தேசிய மற்றும் பொது மக்களின் வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்