ஷி ச்சின்பிங்-பான் கிமூன் பேச்சுவார்த்தை

பூங்கோதை 2018-05-16 09:25:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷி ச்சின்பிங்-பான் கிமூன் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், போ ஆவ் ஆசிய மன்றத்தின் செயற்குழு தலைவர் பான் கிமூனை மே 15ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.

ஷி ச்சின்பிங் பேசுகையில், ஆசிய பொருளாதார ஒருமைப்பாட்டை முன்னேற்றி, இப்பிரதேசத்தின் நாடுகள் உலகின் பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதை நனவாக்குவது, போ ஆவ் ஆசிய மன்றத்தின் கடமை மற்றும் நோக்கமாகும். இம்மன்றத்தின் செயற்குழுவின் பணிகளுக்கு சீனா முன்பு போலவே ஆதரவு அளித்து வருகிறது. மேலும், பலதரப்புவாதத்தை உறுதியாக ஆதரித்து, பல தரப்பு வர்த்தக அமைப்பு முறையைப் பேணிக்காத்து, திறப்பு தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை சீனா உருவாக்கும் என்றார் அவர்.

ஷி ச்சின்பிங்-பான் கிமூன் பேச்சுவார்த்தை

போ ஆவ் ஆசிய மன்றத்துக்கான சீனாவின் ஆதரவுக்கு பான் கிமூன் நன்றி தெரிவித்தார். சீனாவின் “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை” முன்மொழிவைப் பயன்படுத்தி, ஆசிய நாடுகளின் திறப்பு மற்றும் புதுமையை இம்மன்றம் முன்னேற்ற வேண்டும் என்றும் பான் கிமூன் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்