வட கொரிய தொழிலாளர் கட்சியின் நட்புப் பயணக்குழுவுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

பூங்கோதை 2018-05-17 09:51:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரிய தொழிலாளர் கட்சியின் நட்புப் பயணக்குழுவுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

வட கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய கமிட்டியின் துணைத் தலைவருமான பார்க் தெய்-சாங்கின் தலைமையிலான வட கொரிய தொழிலாளர் கட்சியின் நட்புப் பயணக்குழுவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் மே 16ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.

வட கொரிய தொழிலாளர் கட்சியின் நட்புப் பயணக்குழுவுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

ஷி ச்சின்பிங் பேசுகையில், வட கொரியாவின் மாநிலங்கள் மற்றும் நகரங்களின் தலைவர்கள் கூட்டாக சீனாவில் பயணம் மேற்கொள்வது, கிம் ஜோங்-உன்னுடன் நான் உருவாக்கிய முக்கிய பொது கருத்துக்களைச் செய்லபடுத்தியதை வெளிக்காட்டுகிறது. அத்துடன், இரு கட்சிகளுக்கிடையிலான முக்கிய பரிமாற்றமாகவும் இது உள்ளது. மேலும், இரு கட்சிகளும், இரு நாடுகளும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, சீன-வட கொரிய நட்புப்பூர்வ ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு, கிம் ஜோங்-உன் மற்றும் வட கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டி பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதையும் இது வெளிப்படுத்தியுள்ளது. இரு தரப்புகளும் இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன-வட கொரிய நட்புப்பூர்வ ஒத்துழைப்பு உறவின் வளர்ச்சியை முன்னேற்றும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்