ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாடு

தேன்மொழி 2018-06-10 18:25:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு ஜுன் 10-ஆம் நாள் சீனாவின் ஷான்டொங் மாநிலத்தின் ட்சிங் தாவ் நகரில் நடைபெற்றது. நடப்பு உச்சி மாநாட்டுத்துக்குத் தலைமைத் தாங்கிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஷாங்காய் எழுச்சியை வெளிப்படுத்தி எதிர்காலப் பொதுச் சமூகத்தை கூட்டாகக் கட்டியமைப்பது என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 17 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை அவர் இவ்வுரைன்போது பாராட்டினார். அதோடு, ஷாங்காய் எழுச்சியின் வழிக்காட்டலில், தற்கால இன்னல்கள் மற்றும் அறைக்கூவல்களைத் தீர்க்குமாறு தொடர்புடைய பல்வேறு தரப்புகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஷிச்சின்பிங் உரைநிகழ்த்தியபோது கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 17 ஆண்டுகளில், நிறைய சாதனைகள் கிடைத்துள்ளன. பல்வேறு உறுப்பு நாடுகள், அணிசேரா, பகைமை கொள்ளாத, மூன்றாவது தரப்புக்கு எவ்வித எதிர்ப்புகளையும் உருவாக்காத ஆக்கப்பூர்வ கூட்டாளியுறவை உருவாக்கி வருகின்றன. இது, சர்வதேச உறவின் தத்துவம் மற்றும் நடைமுறையாக்கத்தில் முக்கிய புத்தாக்கமாகும். பிரதேச ஒத்துழைப்புக்கு புதிய மாதிரியையும் இது உருவாக்கியது என்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாடு

தற்போது, உலகில் மேலாதிக்க வாதம், ஆதிக்க அரசியல், ஒரு சார்பு வாதம், வர்த்தப் பாதுகாப்பு வாதம், உலகமயமாக்கலுக்கு எதிரான சிந்தனை முதலியவை இடைவிடாமல் எழுந்து வருகின்றன. இதனை எதிர்கொள்வதற்கான ஐந்து ஆலோசனைகளை, உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம் ஷிச்சின்பிங் முன்வைத்தார். முதலாவதாக, புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, தூய்மை, திறப்பு மற்றும் பகிர்வு ரீதியிலான வளர்ச்சிக் கோட்பாட்டை முன்னேற்ற வேண்டும். இரண்டாவதாக, பொதுமை, பன்னோக்கம், ஒத்துழைப்பு, தொடர்ச்சி ரீதியிலான பாதுகாப்புக் கோட்பாட்டை நிறைவேற்ற வேண்டும். மூன்றாவதாக, திறப்பு, இணைப்பு, பரஸ்பர நன்மை, கூட்டுவெற்றி ரீதியிலான ஒத்துழைப்புக் கோட்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். நான்காவதாக, சமத்துவம், ஒன்றை ஒன்று கற்றுக்கொள்ளுதல், உரையாடல், உள்ளடக்கல் ரீதியிலான நாகரிகக் கோட்பாட்டை உருவாக்க வேண்டும். கடைசியாக, கூட்டுக் கலந்தாய்வு, கூட்டுக் கட்டுமானம், கூட்டுப் பகிர்வு ரீதியிலான உலக நிர்வாகக் கோட்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று ஐந்து ஆலோசனைகளை ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, புதிய உறுப்பு நாடுகளைச் சேர்த்த பின் நடைபெற்ற முதல் உச்சி மாநாடு, இதுவாகும். இந்நிலைமையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு பன்முக திட்ட வரைவு, தெளிவான திசை மற்றும் வழிமுறை கொண்ட மாபெரும் இலக்கு நடப்பு உச்சி மாநாட்டில் உறுதிப்படுத்தப்படுவதை இம்மாநாட்டில் பல்வேறு தரப்புகளும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தன. இது பற்றி ஷிச்சின்பிங் கூறியதாவது,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பயங்கரவாதம், பிரிவினைவாதம், அதி தீவிரவாதம் ஆகிய 3 சக்திகளை ஒடுக்குவதற்கான 2019-2021ஆம் ஆண்டின் ஒத்துழைப்புப் பணித்திட்டத்தை ஆக்கமுடன் செயல்படுத்தி பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும். அடுத்த மூன்று ஆண்டுகளில், சீனா, இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 2000 சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் என்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டு செழுமை மற்றும் வளர்ச்சி குறித்து ஷிச்சின்பிங் கூறியதாவது: இவ்வாண்டு நவம்பர் திங்கள் ஷாங்காய் மாநகரில் நடைபெறும் முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் பல்வேறு தரப்புகள் ஆக்கப்பூர்வமாக பங்கெடுப்பதை சீனா வரவேற்கின்றது. மேலும், ட்சிங் தாவ் நகரில் சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ளூர் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு முன்மாதிரி மண்டலத்தைக் கட்டியமைப்பதற்கு சீன அரசு ஆதரவு அளிக்கும். சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சட்ட சேவை கமிட்டி நிறுவப்படும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வங்கி கட்டமைப்புக் கட்டுகோப்புக்குள் 3000 கோடி யுவான் மதிப்புள்ள சிறப்புக் கடன் திட்டப்பணி உருவாக்கப்படும் என்றார். தவிர, அடுத்த 3 ஆண்டுகளில், சீனா பல்வேறு உறுப்பு நாடுகளுக்கு 3000 மனித வளத் திட்டங்களுக்கான பயிற்சி இடங்களை வழங்கும். சீனாவின்“ஃபங் யூன்-2”இலக்கு வானிலை செயற்கைக் கோள் மூலம்,  உறுப்பு நாடுகளுக்கு சேவை வழங்க சீனா விரும்புகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்