சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றக்கூட்டம்

தேன்மொழி 2018-07-10 10:27:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றக்கூட்டம்

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றக்கூட்டம்

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 8ஆவது அமைச்சர்கள் நிலைக் கூட்டம் 10-ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள குவைத்தின் அமீர் சபாஹ், 21 அரபு நாடுகளின் அமைச்சர்கள், அரபு நாடுகள் லீக்கின் தலைமைச் செயலாளர் ஆகியோர், துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.

புதிய காலத்தில் சீன மற்றும் அரபு நாடுகளின் நெடுநோக்கு கூட்டாளியுறவு என்ற தலைப்பில், ஷிச்சின்பிங் துவக்க விழாவில் முக்கிய உரைநிகழ்த்தினார். மேலும், இரு தரப்புகளுக்குமிடையே பன்முக ஒத்துழைப்பு, கூட்டு வளர்ச்சி, எதிர்காலத்தை நோக்குதல் ஆகியவற்றுடன் கூடிய சீன-அரபு நாடுகளின் நெடுநோக்கு கூட்டளியுறவை நிறுவ இரு தரப்பும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முக்கியப் பகுதியில் அரபு நாடுகள் அமைந்துள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம், இரு தரப்பு உறவின் வளர்ச்சியை பன்முகங்களிலும் தூண்டும். அதோடு, இரு தரப்புகளுக்கிடையேயான பன்முக ஒத்துழைப்பும் புதிய கட்டத்தில் நுழையும் என்று கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்