பிரிக்ஸ் அமைப்பின் 10ஆவது உச்சிமாநாடு

2018-07-27 10:07:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் அமைப்பின் 10ஆவது உச்சிமாநாடு

பிரிக்ஸ் அமைப்பின் 10ஆவது உச்சிமாநாடு 26ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க் நகரில் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் ரமபோசா, இவ்வுச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், பிரேசில் அரசுத் தலைவர் தெமீர், ரஷிய அரசுத் தலைவர் புத்தின், இந்திய தலைமையமைச்சர் மோடி ஆகியோர் இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். “ஆப்பிரிக்காவிலுள்ள பிரிக்ஸ் நாடுகள்: 4ஆவது தொழிற்துறை புரட்சியில் சகிப்புத் தன்மையுடைய அதிகரிப்பு மற்றும் கூட்டுச் செழுமையை நாடுவது ” என்ற தலைப்பில், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, பொது அக்கறையுடைய முக்கிய சர்வதேசப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து ஐந்து நாட்டுத் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, பரந்த ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.

பிரிக்ஸ் அமைப்பின் 10ஆவது உச்சிமாநாடு

ஷிச்சின்பீங் நிகழ்த்திய உரையில் புதிய தொழிற்துறை புரட்சியின் முக்கிய சிறப்பியல்புகள் எடுத்துக் காட்டப்பட்டு, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பின் எதிர்கால வளர்ச்சி பற்றி முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

பிரிக்ஸ் நாடுகள், வரலாற்றுப் போக்கைப் பின்பற்றி, நெடுநோக்கு கூட்டாளி உறவை ஆழமாக்க வேண்டும் என்று ஷிச்சின்பீங் வலியுறுத்தினார்.

இவ்வுச்சி மாநாட்டுக்கு பிறகு, ஐந்து நாட்டுத் தலைவர்களின் முன் பல ஒத்துழைப்பு ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டன.

 

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்