சீன-பிரெஞ்சு அரசுத் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி

வான்மதி 2018-10-29 14:29:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செயற்கைக்கோள் ஏவுதல் பற்றி சீன-பிரெஞ்சு அரசுத் தலைவர்கள் வாழ்த்துச் செய்தி

சீன-பிரெஞ்சு கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரெஞ்சு அரசுத் தலைவர் மக்ரோன் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

விண்வெளி ஒத்துழைப்பு, சீன-பிரெஞ்சு பன்முக நெடுநோக்கு கூட்டுறவில் முக்கியமான அம்சமாகும். நடப்பு ஏவுதலின் வெற்றி, இத்துறையில் இருநாடுகள் பெற்றுள்ள புதிய சாதனை. உலக கடல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரணம், காலநிலை மாற்றச் சமாளிப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தச் செயற்கைக்கோள் முக்கிய பங்காற்றும் என்று ஷிச்சின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டினார்.

மக்ரோன் கூறுகையில், இந்தச் செயற்கைக்கோளின் வெற்றிகரமான ஏவுதல், காலநிலை மாற்றத்தை சமாளிக்க பன்னாட்டுச் சமூகத்தைத் தூண்டும் பிரான்சு மற்றும் சீனாவின் ஆக்கப்பூர்வ விருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. விண்வெளி மற்றும் காலநிலை மாற்றச் சமாளிப்பு துறையில் சீனாவுடன் இணைந்து பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்த பிரான்சு விரும்புகிறது என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்