ஷிச்சின்பிங்- நரேந்திர மோடி சந்திப்பு

மதியழகன் 2019-10-12 21:37:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் 12ஆம் நாள் சனிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக சந்திப்பு நடத்தினர். இரு நாட்டுத் தலைவர்களும், நட்பார்ந்த சூழ்நிலையில் சீன-இந்திய உறவு உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அப்போது, ஷிச்சின்பிங் பேசுகையில் சீன-இந்திய உறவை பேணிக்காப்பது மற்றும் வளர்ப்பது என்பது, சீனா உறுதியாக கடைப்பிடித்து வரும் கொள்கையாகும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

இரு நாட்டுறவில், ஒன்று மீது ஒன்றின் நம்பிக்கையை மேம்படுத்துவது, ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட சில ஆலோசனைகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.

மேலும், அடுத்த ஆண்டு இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு, சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டு, உள்ளிட்ட நிகழ்ச்சிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும்.ஃபூஜியன் மாநிலம் மற்றும் தமிழ் நாடு, கியுவான் ட்சோ மற்றும் சென்னை இடையேயான நட்பு மாநிலம் மற்றும் நட்பு நகரம் என்ற ரீதியிலான உறவை ஆதரிக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

சென்னை அருகே நடைபெற்ற இச்சந்திப்பு மூலம், நரேந்திர மோடியுடன் இணைந்து சீன-இந்திய உறவு குறித்து விரிவாகவும் ஆழமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன். இதனிடையில், மேலும் தெளிவான இலக்கு மற்றும் திசை உருவாக்கப்படும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

இப்பயணத்தில், இந்திய அரசு மற்றும் மக்களின் சிறப்பான உற்சகமான வரவேற்பையும், இரு நாட்டு மக்களுக்கிடையேயான பழைய நட்புறவையும் உணர்ந்தேன் என்றார் அவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்