ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினின் சிறப்பு நேர்காணல்

மதியழகன் 2018-06-06 11:20:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மே 31ஆம் நாள் சீன ஊடக குழுமத் தலைவர் ஷென் ஹாய்சியோங்கிற்கு சிறப்பு நேர்காணலை அளித்தார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மே 31ஆம் நாள் சீன ஊடக குழுமத் தலைவர் ஷென் ஹாய்சியோங்கிற்கு சிறப்பு நேர்காணலை அளித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங்தாவ் உச்சி மாநாட்டில் பங்கேற்று சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மே 31ஆம் நாள் சீன ஊடக குழுமத் தலைவர் ஷென் ஹாய்சியோங்கிற்கு சிறப்பு நேர்காணலை அளித்தார். ரஷிய-சீன உறவு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்காலம் உள்ளிட்டவை பற்றி அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மே 31ஆம் நாள் சீன ஊடக குழுமத் தலைவர் ஷென் ஹாய்சியோங்கிற்கு சிறப்பு நேர்காணலை அளித்தார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மே 31ஆம் நாள் சீன ஊடக குழுமத் தலைவர் ஷென் ஹாய்சியோங்கிற்கு சிறப்பு நேர்காணலை அளித்தார்.

மே திங்கள் ரஷிய அரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, புதின் வெளிநாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளிப்பது இதுவே முதன்முறையாகும். கிரெம்ளின் மாளிகையிலேயே சீன செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளிப்பதும் இது தான் முதன்முறை. பேட்டியின் துவக்கத்தில், சீனர்களுக்கும் ஒவ்வொரு சீன குடும்பத்துக்கும் புதின் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து,  சீனாவுடனான நம்பகத் தகுந்த கூட்டாளி, கூட்டணி, நண்பர் என்ற உறவுக்கு ரஷியா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அண்டை நாடுகளான ரஷியாவும் சீனாவும், ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் அடிப்படையில், உலகில் தனிப்பட்ட உறவை உருவாக்கியுள்ளன. 2001ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாகிய அண்டை நட்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், தற்போது வரை இரு நாட்டு உறவின் அடிப்படையாக மாறியுள்ளது. நாடு மற்றும் மக்கள் தொடர்பான துறைகளில் பல பொது கருத்துக்கள் எட்டப்பட்டுள்ளன என்று புதின் தெரிவித்தார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மே 31ஆம் நாள் சீன ஊடக குழுமத் தலைவர் ஷென் ஹாய்சியோங்கிற்கு சிறப்பு நேர்காணலை அளித்தார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மே 31ஆம் நாள் சீன ஊடக குழுமத் தலைவர் ஷென் ஹாய்சியோங்கிற்கு சிறப்பு நேர்காணலை அளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

என்ன மிக முக்கியமானது என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரையை மேற்கோள் காட்டி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தான் என்று தெரிவித்தார். இந்த இலக்கினை நிறைவேற்றும் விதம், வெவ்வேறு பல வழிகள் காணப்படுகின்றன. ஆனால், ஒரு பொது இலக்கு உண்டு. ரஷியாவில், குடிமக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதை விட முதன்மையான இலக்கு வேறில்லை. இதன்படி, ரஷிய-சீன உறவை எப்படி உருவாக்குவது, இந்த இலக்கினை நனவாக்கி, வெளிப்புறத்தின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது ஆகியவற்றை நாங்கள் ஆலோசித்து வருகின்றோம். நவீனமயமான புதுமையாக்கம்,  எண்முறைப் பொருளாதாரம், மரபணு தொழில் நுட்பம்,  நவீனமயமான நாடு மற்றும் பொருளாதார நிர்வாகம் ஆகியற்றின் மூலம், புதிய ரகப் பொருளாதார ஆக்கப் பணிகளை வலுப்படுத்த வேண்டும் என்பதையும் ஆலோசிக்கின்றோம். எனவே, இரு நாடுகளுக்கும் பல ஒத்த அம்சங்கள் உள்ளன. முயற்சி எடுத்தால், புதிய சாதனைகள் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார் அவர்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை சீனா முன்வைத்து, 5 ஆண்டுகள் நிறைவாகி விட்டன. 2015ஆம் ஆண்டு மே திங்கள்,  சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவும், ரஷியாவின் ஐரோப்பிய-ஆசிய பொருளாதாரக் கூட்டணியும் ஒன்றிணைக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக, இது தொடர்பான ஒத்துழைப்பு பயன் அடைந்து வருகிறது. எரியாற்றல், போக்குவரத்து, வான் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் பெரிய திட்டங்களிலான ஒத்துழைப்பில் அதிக சாதனைகள் காணப்பட்டுள்ளன.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற சீனாவின் முன்மொழிவை, பேட்டியின் போது புதின் உயர்வாக பாராட்டினார். இந்த முன்மொழிவு பயன்மிக்கது, முக்கியமானது, அதன் எதிர்காலம் ஒளிமிக்கது என்றும் அவர் கருதுகிறார். ரஷியா எப்போதும் இந்த முன்மொழிவை ஆதரித்தே வந்துள்ளது. நெடுநோக்கு வளர்ச்சித் திட்டங்களை இணைப்பதன் மூலம் ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு, சீனா-ரஷியா இடையே மொத்த வர்த்தகத் தொகை, 8,700 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அந்த அதிகரிப்புப் போக்கினை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று புதின் கூறினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் விரிவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது உச்சி மாநாடு பற்றி பேசுகையில்,  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, உலகளாவிய அமைப்பாக மாறியுள்ளது. இவ்வமைப்பின் எதிர்கால வளர்ச்சி மீது எனக்கு நம்பிக்கை உண்டு என்று தெரிவித்தார்.

அத்துடன் அவர் சுட்டிக்காட்டிக் கூறுகையில்:

உறுப்பு நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கிடையேயான விரிவான ஒத்துழைப்பை உறுதி செய்து, ஒத்துழைப்புக்குத் தேவையான ஆதரவை அளிப்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும். இவ்வமைப்பு, பிற நாடுகளுக்கு எதிரானதல்ல. இந்த நாடுகளின் சக்தியை ஒன்றாக இணைப்பது, எமது சொந்த வளர்ச்சிக்கு வழிகோலும் ஒரு முக்கியப் பகுதியாகும். அது,  உலகின் நிலைமையை நிர்ணயிக்கும் காரணியாகவும் மாறும். மேலும், நேர்மறை ரீதியிலான காரணியாகவும் உருவெடுக்கும் என்று நம்புகின்றேன்.

ட்சிங்தாவ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் முன்பு, புதின் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளனர். 20க்கும் அதிகமான முறை நடைபெற்ற ஷிச்சின்பிங்-புதின் சந்திப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. பேட்டியில், பழைய நண்பர் ஷிச்சின்பிங் தொடர்பான பல விபரங்களையும் மனப்பதிவுகளையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். எனது பிறந்த நாளைக் கொண்டாடிய வெளிநாட்டுத் தலைவர் ஷிச்சின்பிங் மட்டுமே என்பதை புதின் நினைவுக் கூர்ந்தார். அவரைப் பொறுத்த வரை, ஷிச்சின்பிங் ஒத்துழைப்புக் கூட்டாளி மற்றும் நம்பகத் தகுந்த நல்ல நண்பர் ஆவார்.

அவர் கூறியதாவது:

பல தலைவர்களை போன்று, ஷிச்சின்பிங், பணியின் பயனை அதிகபட்சமாக நனவாக்கி, சொந்த நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்க முயற்சி செய்து வருகிறார். பிரச்சினையை ஆய்வு செய்ய விரும்பும் சிறந்த நபர். அவருடன் சர்வதேச விவகாரங்கள் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றி விவாதிப்பது மிகவும் ஆவலாக இருக்கும் என்று புதின் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டு ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்றபோது, புதின் ஷிச்சின்பிங்கிற்கு ஐஸ் கிரீமை அன்பளிப்பாகக் கொண்டு வந்தார். நடப்பு சீனப் பயணத்தில், என்ன சிறப்பு அன்பளிப்பு என்ற கேள்விக்கு “அன்பளிப்பு இருக்கும்; ஆனால் அது ரகசியம்” என்று தெரிவித்தார்.

சிறப்பு நேர்காணலில்,சீனாவின் இணைய பயன்பாட்டாளர்களின் பல ஆர்வமிக்க கேள்விகளுக்கும் புதின் அடுத்தடுத்து பதில் அளித்து நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார்.  நடப்பு உலக்க் கோப்பை கால்பந்துப் போட்டியில் எந்த அணி  கோப்பையை  வெல்லும் என்ற கேள்விக்கு,  பல நாடுகளைச் சேர்ந்த அணிகள், சாம்பியன் பட்டம் பெற வாய்ப்புள்ளது. லத்தீன் அமெரிக்க குழுவில், அர்ஜெண்டினா மற்றும் பிரேசில்  அணிகள் வெல்ல வாய்ப்புள்ளது.

பிடித்த கால்பந்து வீரர் யார் என்ற கேள்விக்கு, ரஷியா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த லேவ் யாஷின், பிற நாட்டு வீரர்களைச் பெறுத்த வரை பீலே ஆகியோர் நான் மிகவும் விரும்பும் வீரர்களாவர். மரடோனாவையும் பிடிக்கும் என்றார் அவர்.

தற்போது எந்த விளையாட்டுகளில் ஈடுபடுகிறீர்கள், தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு நாளும், இரண்டு முதல் இரண்டரை மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். கருவி மூலம் பயிற்சி, நீச்சல். வாய்ப்பு இருந்தால், ஜூடோ, ஐஸ் ஹாக்கி விளையாட்டுகளிலும் ஈடுபடுவேன் என்றார் அவர்.

30 நிமிடங்ளுக்கு மேலான சிறப்பு நேர்காணலில், ரஷியா-மேலை நாடுகளுக்கு இடையேயான உறவுகள், கொரிய தீபகற்பம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்கும் புதின் பதில் அளித்தார். ரஷியா மீது மேலை நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் குறித்து பேசுகையில், அனைத்து சட்டவிரோத தடைகளும், உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் கொள்கையாகும். மேலை நாடுகளுடனான உறவு சில முறைகளின் மூலம் இயல்பாக மாற வேண்டும் என்று விரும்புகின்றேன். கொரிய தீபகற்பக பிரச்சினையில், ரஷியாவின் நிலைப்பாடு சீனாவை போன்றதே. அதாவது, கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மையை நனவாக்கி, பிரதேசத்தின் பதற்றத்தை அகற்றுவது தான் எங்கள் நிலைப்பாடு என்று புதின் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்