வறுமையை அகற்ற சீனா ஆலோசனை

மோகன் 2018-06-25 19:09:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13வது தேசிய கமிட்டியின் நிரந்தரக் குழுவின் 2ஆவது கூட்டத்தொடர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. கடும் வறுமை நிலவும் பிரதேசங்களை வறுமையிலிருந்து விடுவிப்பது தொடர்பாக உறுப்பினர்கள் விவாதித்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான வாங் யாங் துவக்க விழாவில் கலந்துகொண்டார். 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனத் துணை தலைமையமைச்சருமான ஹு சுவுன் குவா அறிக்கையை சமர்ப்பித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்