பிரிக்ஸ் நாடுகள் கூட்டு வளர்ச்சி

மோகன் 2018-07-26 11:10:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் 10ஆவது தலைவர்கள் சந்திப்பு 25ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் துவங்கியது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அன்று நடைபெற்ற தொழில் மற்றும் வணிகக் கருத்தரங்கில் உரையாற்றினர். 4ஆவது தொழிற்துறை புரட்சி ஏற்பட்டுள்ள வாய்ப்பை இறுகப்பற்றி, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தையும் முதலீட்டையும் பெரிதாக்கி, ஆப்பிரிக்க மண்டலத்தின் தாராள வர்த்தகத்தை முன்னேற்றி, பொருளாதார அதிகரிப்பையும் மக்கள் நலனையும் உயர்த்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். திறந்த ரக உலகப் பொருளாதாரத்தை உருவாக்கி, ஒருதரப்புவாதத்தையும் வர்த்தக பாதுகாப்பு வாதத்தையும் எதிர்த்து, வர்த்தக மற்றும் முதலீட்டு சுதந்திரமயமாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்