சீனம் கற்கும் இலங்கை காவல்துறையினர்

நாதன் 2018-09-11 14:35:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் சீன சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உதவும் வகையில், அந்நாட்டு காவல்துறையினர் சீன மொழி கற்க உள்ளனர். இதற்காக, இலங்கை காவல் படையைச் சேர்ந்த குழு ஒன்று பெய்ஜிங்கிற்கு வந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினர் சீன கல்விக்காக தேர்வு செய்யப்பட்டனர். காவல்துறையினரின் அடிப்படைச் சீன மொழி அறிவு, நாட்டில் உள்ள சீனர்களுக்குப் பெரிதும் உதவும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையின் சுற்றுலா சந்தையில் சீனா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இவ்வாண்டில் தற்போதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கு 90 ஆயிரம் சீனர்கள் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்