சீன-வெனிசூவேலா அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

மதியழகன் 2018-09-14 20:07:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வெனிசூவேலா அரசுத் தலைவர் நிகோலஸே மதுரோ வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனா-வெனிசூலா இடையேயான பன்முக நெடுநோக்கு கூட்டுறவை புதிய கட்டத்திற்கு முன்னேற்ற இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை கூட்டாக முன்னெடுப்பது பற்றிய புரிந்துணர்வு குறிப்பாணை உள்ளிட்ட இரு தரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின.

மேலும், சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங், சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டித் தலைவர் லீ ட்சான்சூ ஆகியோரை, மதுரோ சந்தித்துப் பேசினார்.

 

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்