இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் பணபரிவர்த்தனை ஒப்பந்தம்

இலக்கியா 2018-12-05 10:06:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில், தங்களது நாணயத்திலேயே பணபரிவர்த்தனை செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளதாக அபுதாபியில் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம், அமெரிக்க டாலரைப் போன்ற சில கடினமான நாணயங்களைச் சார்ந்திருக்கும் அவசியத்தைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சர் ஷேக் அப்துல் பின் சையத் அல் நயான் ஆகியோருக்கு முன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல், ஆப்பிரிக்காவில் கூட்டு வளர்ச்சி ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பாகவும் இரு தரப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பொருளாதாரத் துறையில் இரு நாடுகளும் வலுவான உறவைக் கையாண்டு வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத் தொகை 52 கோடி டாலர் ஆகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்