ஹூபெய் மாநிலத்திற்கு ஆதரவு கொள்கைகள்:சீனா

சரஸ்வதி 2020-04-29 19:58:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டி ஏப்ரல் 29ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இதற்குத் தலைமை தாங்கினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலைமை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தவிரவும், முறையான வழிமுறையில் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமைப்படுத்தி அமல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில், ஹெபெய் மாநிலம் குறிப்பாக, வூகான் நகரில் மக்கள் பெரிய தியாகம் செய்துள்ளனர். பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைக்கான காப்புறுதி ஆகிய துறைகளில் கடினமான நிலை காணப்பட்டுள்ளது. ஹூபெய் மாநிலத்தின் பொருளாதார மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை வழங்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி ஆய்வு செய்து முடிவு செய்யும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்