மக்களுக்கு மே தின நல்வாழ்த்துக்கள்:ஷிச்சின்பிங்

2020-04-30 20:06:40
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மே தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஏப்ரல் திங்கள் 30ஆம் நாள், சென் சோ யுங் ஃபான் குழுமத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இக்குழுமத்தின் பணியாளர்களுக்கும் நாட்டின் மக்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்களை அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திடீரென நிகழ்ந்த கரோனா வைரஸைச் சமாளிக்கும் போது, மருத்துவச் சிகிச்சைப் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சுத்தம் செய்த தொழிலாளர்கள், தூதஞ்சல் சேவை வழங்கும் பணியாளர்கள், தொற்று வைரஸ் தடுப்புக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான உழைப்பாளர்கள், சொந்த பதவியில் சுறுச்சுறுப்பாக உழைத்து தம்மை அர்ப்பணித்து வருகின்றனர். இதன் மூலம், கரோனா வைரஸ் தடுப்புக்கான வலிமையான ஆற்றல் ஒன்று திரண்டுள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்