"On the Road" புகைப்படப் போட்டி!

பூங்கோதை 2019-02-28 17:11:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

CRI Online இணையதளம் ஏற்பாடு செய்துள்ள “On the Road” என்ற தலைப்பிலான புகைப்படப்போட்டி பிப்ரவரி 28ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. பல்வேறு மொழிகளிலான புதிய ஊடகங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சமூக ஊடகங்கள், வெளிநாட்டு ஒத்துழைப்பு மேடைகள் ஆகியவற்றின் மூலம், உலக நண்பர்கள் புகைப்படங்களை அனுப்பலாம்.

அமைதி மற்றும் ஒத்துழைப்பு, திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை, ஒன்றுக்கொன்று பரிமாற்றம், ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது ஆகியவற்றை மையமாக கொள்கின்ற பட்டுப்பாதை எழுச்சியை வெளிப்படுத்துவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான நட்புபார்ந்த பரிமாற்றம் மற்றும் நேர்மையான நட்புறவைப் பதிவேற்றுவது, பல்வேறு தொடர்புடைய நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டுவது ஆகியவை, இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 28 முதல், ஏப்ரல் 10ஆம் நாள் வரை இப்போட்டி நடத்தப்படுகிறது. இதில், பிப்ரவரி 28 முதல் மார்ச் 28ஆம் நாள் வரை புகைப்படங்களின் சேகரிப்புக் காலமாகும். மார்ச் 29 முதல் ஏப்ரல் 9ஆம் நாள் வரை, தேர்ந்தெடுப்புக் காலமாகும். ஏப்ரல் 10ஆம் நாள் போட்டியின் முடிவு வெளியிடப்படும்.

withyou2019@qq.com என்ற மின்னஞ்சல், CRI Tamilஎன்னும் முகநூல் ஆகியவற்றுக்கு நீங்கள் புகைப்படங்களை அனுப்பலாம். www.cri.cn/withyou என்ற இணையத்தளத்தில் விவரமான விதிமுறைகளைப் பார்க்கலாம்.

"On the Road" புகைப்படப் போட்டி!


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்