2030ஆம் ஆண்டு சீன-ஆசியான் நெடுநோக்கு கூட்டாளி உறவு

மோகன் 2017-11-14 09:14:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2030ஆம் ஆண்டு சீன-ஆசியான் நெடுநோக்கு கூட்டாளி உறவு

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் உள்ளூர் நேரப்படி நவம்பர் 13ஆம் நாள் பிற்பகல், பிலிப்பைன்ஸ் சர்வதேச கூட்ட மையத்தில், 20ஆவது சீன-ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். 10 ஆசியான் நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கெடுத்தனர். லீக்கெச்சியாங் அந்நாட்டின் அரசுத் தலைவர் துத்ல்த் ஆகிய இருவரும் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.

இவ்வாண்டு, ஆசியான் நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டாகும். ஆசியான் பெற்றுள்ள வளர்ச்சியைப் பார்த்து சீனா மகிழ்ச்சியடைகிறது. ஆசியானின் எதிர்காலம் மீது சீனா அதிகமான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. ஆசியனின் கட்டுமானம், பிரதேசத்தின் ஒத்துழைப்புக்கான மையப் பகுதி, சர்வதேச விவகாரத்தில் முக்கியமான பங்கு முதலிவற்றுக்கு சீனா ஆதரவளிக்கிறது. மேலும், ஆசியனுடனான தூதாண்மைக்கு சீனா முதன்மையான இடத்தை வழங்கி வருகிறது. அதோடு, சீனாவின் நல்ல அண்டை நாடு, நல்ல நட்பார்ந்த நாடு, நல்ல கூட்டுறவாக ஆசியான் திகழ்கிறது. ஆசியானுடன் கை கோர்த்து, பொதுக் கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தி, கூட்டுச் செழுமையைப் பகிர்ந்துகொண்டு, கூட்டுக் கடமைக்குப் பொறுப்பேற்கும் பொது சமூகத்தை சீனாவும் ஆசியானும் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று லீக்கெச்சியாங் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்