உலக பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா ஏற்படுத்திய பாதிப்பு

கலைமணி 2018-08-09 17:35:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா ஏற்படுத்திய பாதிப்பு

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பாக 2015ஆம் ஆண்டு எட்டப்பட்ட பன்முக உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகும் என்று மே திங்கள் 8ஆம் நாள் அமெரிக்கா ஆக்கபூர்வமாக அறிவித்தது. ஆகஸ்ட் 7ஆம் நாள் அமெரிக்காவின் இந்த தீர்மானம் முதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான பன்முக தடை நடவடிக்கைகளை அமெரிக்கா மீண்டும் மேற்கொண்டது. ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தகம் மேற்கொள்ளாது என்று அமெரிக்கா அச்சுறுத்தியது. இதனால், பிரான்ஸைச் சேர்ந்த பியுஜேத் சிட்ரோன் மற்றும் ரைனோ இரு வாகன தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலக பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா ஏற்படுத்திய பாதிப்பு

அது மட்டுமல்லாமல், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் அமெரிக்கா அச்சுறுத்தியது.

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தினால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலருக்கு உயரும் என்று இவ்வாண்டு ஜுலை திங்களில், அமெரிக்காவின் மேரில் லிஞ்சு குழுமம் மதிப்பீடு செய்தது. இம்முடிவு உலக பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்