பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக எடுத்த ஆவணப்படம் திரையிடும் விழா

சரஸ்வதி 2019-11-14 09:39:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

11ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக எடுத்த முதலாவது ஆவணப்படமான குழந்தை மற்றும் கௌரவம் உலகளவில் முதன்முறையாகக் திரையிடப்பட்டது. இத்திரையிடும் விழா, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. சீன அரசவையின் செய்தி அலுவலகம், சீன அயல் மொழி வெளியீட்டு நிர்வாகம் மற்றும் பிரேசிலின் தொடர்புடைய தரப்பு இவ்விழாவைக் கூட்டாக நடத்தின. பிரிக்ஸ் நாடுகளின் 200க்கு மேலான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர். அப்போது, உண்மையைப் பதிவு செய்யும் திரைப்படம் மற்றும் பிரிக்ஸ் கதை, பிரிக்ஸ் நாடுகளின் மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் மக்கள் தொடர்பு, நாகரிகப் பரிமாற்றம் மற்றும் பிரிக்ஸ் கூட்டாளியுறவு ஆகிய மூன்று கருப்பொருட்கள் குறித்து விருந்தினர்கள் ஆழமாக விவாதித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்