சீனாவின் வர்த்தக நடைமுறைகளை புலனாய்வு செய்ய டிரம்ப் உத்தரவு

2017-08-15 14:38:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் வர்த்தக நடைமுறைகளை புலனாய்வு செய்ய டிரம்ப் உத்தரவு

அறிவுசார் சொத்துரிமை நடைமுறை உள்ளிட்ட சீனாவின் வர்த்தக நடைமுறைகளை புலனாய்வு   செய்யுமாறு அமெரிக்க வர்த்தக பிரிதிநிதி ராபர்ட் லைத்திஸிருக்கு அதிகாரம் வழங்கும்   விதமாக, அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்டு டிரம்ப் 14ஆம் நாள் நிர்வாகக் குறிப்பாணை   ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால், அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஒரு சார்பான நடவடிக்கை சீன-அமெரிக்க வர்த்தக   உறவைப் பாதிக்க கூடும் என்று பல்வேறு துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த நிர்வாக குறிப்பாணை ஆனது, அமெரிக்கா உடனடியாக தொடர்புடைய   புலனாய்வு மேற்கொள்வதைக் குறிக்காது. மேலும், சீனா மீது தடை விதிப்பது உறுதி   என்றும் பெருட்பாடது.

உலக வர்த்தக விதிகளைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க அரசு ஒரு சார்பு நடவடிக்கை   மேற்கொண்டு வர்த்தக சர்ச்சையைத் தீர்த்தால், பிரச்சினையை தீர்க்க உதவ முடியாது.   அமெரிக்காவின் நுகர்வோர், மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனங்களின்   நலன்களைப் பாதிக்க கூடும் என்று அமெரிக்காவின் அரசியல் மற்றும் வணிக துறையினர் பலர்   சுட்டிக்காட்டினர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்