பிரிக்ஸ் அமைப்பின் 2வது பொன்னிற பத்தாண்டு

கலைமணி 2017-09-04 16:46:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் அமைப்பின் 2வது பொன்னிற பத்தாண்டு

4ஆம் நாள் பிரிக்ஸ் நாடுகளின் 9வது உச்சி மாநாடு, ஃபூ ச்சியன் மாநிலத்தின் சியா மென் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங் இதற்குத் தலைமை தாங்கினார். தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சூமா, பிரேசில் அரசுத் தலைவர் டேமெர், ரஷிய அரசுத் தலைவர் புதின், இந்திய தலைமை அமைச்சர் மோடி ஆகியோர், இதில் கலந்துகொண்டனர். சியா மென் அறிக்கை இவ்வுச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான நெடுநோக்கு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு கூட்டாகவே பாடுபட வேண்டும். பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பின் 2வது பொன்னிற பத்தாண்டை உருவாக்க வேண்டும் என்று இவ்வறிக்கை வேண்டுகோள் விடுத்தது.

கடந்த பத்தாண்டு காலத்தில், ஐந்து பிரிக்ஸ் நாடுகள், உலக பொருளாதாரத்துக்கு ஆற்றியுள்ள பங்கு 50 விழுக்காட்டை தாண்டியுள்ளது. உலக பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஆற்றலாகவும், சர்வதேச மேடையிலுள்ள முக்கிய சக்திகளாகவும் இந்த ஐந்து நாடுகள் மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

4ஆம் நாள் நிகழ்த்திய உரையில், கடந்த பத்து ஆண்டுக்காலத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வெற்றிகரமான அனுபவங்களை சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங் தொகுத்தார்.

சரியான வழிமுறையில் ஒத்துழைப்பு மேற்கொண்டது, பிரிக்ஸ் அமைப்பு வெற்றி பெற்ற முக்கிய காரணமாகும். ஒன்றுக்கு ஒன்று மதிப்பையும் ஆதரவையும் அளிப்பது, சொந்த நாட்டுக்கு பொருந்திய வழியைப் பின்பற்றுவது ஆகியவை, இவ்வமைப்பு வெற்றி பெற்ற முக்கிய காரணமாகும் என்று ஷீ ச்சி பிங் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்