பெய்ஜிங்கில் முன்னேறி வரும் 5 ஆண்டுகள் என்ற கண்காட்சி

வாணி 2017-09-25 20:32:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்ஜிங்கில் மும்முரமாக முன்னேறி வரும் 5 ஆண்டுகள் என்ற கண்காட்சி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மாநாடு நடைபெறுவதற்கு முன், செப்டெம்பர் 25ஆம் நாள் மும்முரமாக முன்னேறி வரும் 5 ஆண்டுகள் என்ற கண்காட்சி பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷி ச்சின்பீங் உள்ளிட்ட சீனத் தலைவர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

கடந்த 5 ஆண்டுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீனாவும் அதிக சாதனைகளை படைத்துள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தலைமையில் பல்வேறு தேசிய இன மக்கள் ஒன்றாகப் பாடுபட்டு, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச இலட்சியத்தைப் பெரிதும் முன்னேற்றியுள்ளனர். இதனால், மக்களின் வாழ்க்கை தெளிவாக மேம்பட்டு வருகின்றது என்று ஷி ச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மாநாட்டுக்குப் பின் கட்சியும் நாடும் பெற்றுள்ள சாதனைகளைச் சிறப்பாக பரவல் செய்து, அனுபவங்களைத் தொகுத்து, சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி என்ற சீனக் கனவை நனவாக்குவதற்குத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்