கட்சியின் ஒழுங்குமுறையை வலுப்படுத்தும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

2018-01-12 11:34:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கட்சியின் ஒழுங்குமுறையை வலுப்படுத்தும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்குமுறைச் சோதனைக்கான 19வது மத்திய ஆணையத்தின் 2வது முழு அமர்வுக் கூட்டம், 11ஆம் நாள் நடைபெற்றது.

புதிய யுகத்தில், புதிய தோற்றம் மற்றும் புதிய முயற்சியுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டும். கட்சியை ஒழுங்கு செய்வதை கண்டிப்பான் முறையிலும் பன்முகங்களிலும் முன்னெடுப்பதோடு, புதிய நிலையை திறந்து வைக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்

கட்சியின் ஒழுங்குமுறைய வலுப்படுத்தும் வகையில்,கட்சி அரசியல் கட்டுமானம், கோட்பாட்டுக் கல்வி, நிறுவன ஒருங்கிணைப்பு,பணிமுறை மற்றும் ஒழுங்குமுறை மேம்பாடு ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும். ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை ஆழமாக முன்னேற்றி, கட்சியின் அரசியல் சூழ்நிலையின் அடிப்படை முன்னேற்றத்தை அடைய வேண்டும். அதன் மூலம், குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தையும்  நவீனமயமாக்க நாட்டையும் உருவாக்குவதற்கு உறுதியான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டிற்கு பிறகு, கட்சி வரலாற்றில் நல்ல அனுபவங்களையும் நல்ல செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி, கட்சியின் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதில் சிறந்த சாதனைகளை பெற்றுள்ளோம். எதிர்காலத்தில், இப்பணியை இடைவிடாமல் முன்னெடுப்பதோடு அதை மாற்றாது என்று அவர் கூறினார்.

ஊழல் நிகழ்வு மற்றும் ஊழலின் வேர் ஆகியவற்றை ஊழலை எதிர்ப்பதன் மூலம், ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் பெரும் வெற்றி பெற வேண்டும். இதற்காக, கட்சியின் ஒழுங்குமுறை சோதனைப் பணியை சமூகத்தின் அடிமட்டத்திற்கு விரிவாக்க வேண்டும். பொது மக்களுக்கு அருகில் நிகழும் ஊழல் பிரச்சினைகளை கண்டிப்பான முறையில் கையாள வேண்டும். மேலும், ஊழல் எதிர்ப்புக்கான சர்வதேச ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் உரையில் வலியுறுத்தினார்.

ஒழுங்குமுறை நிறுவனங்களில் பணி புரிந்தவர்கள்,முதலில் தங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். பல்வேறு நிலை ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை வாரியங்கள், மேலும் உயர் நிலை மற்றும் கண்டிப்பான ஒழுங்குமுறையைப் கடைப்பிடிக்க வேண்டும். கட்சி மற்றும் மக்களால் வழங்கப்படும் அதிகாரம் தவறாக பயன்படுத்தாததை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளார்.

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்