சீன அரசுத் தலைவர் சிச்சுவான் மாநிலத்தில் பணிப் பயணம்

2018-02-13 09:37:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட்க் கட்சியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவக் கமிட்டியின் தலைவருமான ஷிச்சின்பீங் 12ஆம் நாள், சிச்சுவான் மாநிலத்தில் தொடர்ந்து பயணம் மேற்கொண்ட, அதே நாள் முற்பகல், 2008ஆம் ஆண்டு மே மாதம், வென்ச்சுவானில் உண்டான நிலநடுகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட யிங் சுயூ வட்டத்தில் அவர் பயணம் மேற்கொண்டார். நிலநடுக்கத்திற்குப் பிந்தைய 10 ஆண்டுகாலத்தில், அங்கு புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையை அவர் பார்வையிட்டார். மேலும், சான் தூ நகரின் பிது மாவட்டத்தில் சீனத் தேசிய நிலை நாகரிக மாதிரி கிராமமான சான் ச்சி கிராமத்திற்கும் அவர் சென்றார். இக்கிராமத்தின் வளர்ச்சிச் சாதனைகளை அவர் வெகுவாக மதிப்பிட்டார். உணவு, உடைப் பிரச்சினையைத் தீர்த்து, பன்முக அளவில் ஓரளவு சொகுசான சமூகத்தை நனவாக்கி, கிராமப்புற வளர்ச்சிக்கு உயிராற்றல் வழங்கத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஷிச்சின்பீங் தெரிவித்தார்.

யிங் சுயூ வட்டத்தில் ஷிச்சின்பீங் பார்வையிட்ட போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுவன் கோங் இடைநிலை பள்ளியில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கும் நிலநெடுக்க நிவாரணப் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கும் ஷிச்சின்பீங் மலர் அஞ்சலி செலுத்தித் தலைதாழ்த்தி வணங்கினார். நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பை அறிந்துகொள்ளும் வகையில்,  இவ்விடத்தை நன்றாகப் பாதுகாத்து, நாட்டுப்பற்றுக் கல்வி அளிக்கும் தளமாக மாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உள்ளூர் பொது மக்கள் நிர்வகித்து வரும் தேயிலை தயாரிப்பு மையத்தில், தேயிலை துறையின் வளர்ச்சியின் மூலம், மக்கள் தங்களது வருமானத்தை அதிகரிக்கும் நிலைமையை ஷிச்சின்பீங் அறிந்துகொண்டார். தேயிலைத் தயாரிப்பு நடவடிக்கையில் ஷிச்சின்பீங் நேரடியாக கலந்துகொண்டார். இதன் மூலம், உள்ளூர் மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கிராமப்புற சுற்றுலா, இவ்வட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வழிமுறையாகத் திகழ்கிறது. உள்ளூர் கிராமவாசிகள் நடத்தி வரும் உணவகத்திற்கு ஷிச்சின்பீங் சென்றார். இந்த உணவகத்தின் நிர்வாகம், இலாபம், உரிமையாளர்களின் வாழ்க்கை முதலியவை குறித்து ஷிச்சின்பீங் கேட்டறிந்தார்.

இப்பயணத்தை முடிக்கும் தருவாயில் ஷிச்சின்பீங், உள்ளூர் கிராமவாசிகளுக்குக் கூறியதாவது

தற்போது, சீனாவின் மக்கள் தொகை 130 கோடி. உணவு, உடை பிரச்சினையை நாம் சொந்தமாகவே தீர்க்க வேண்டும். நகர மயமாக்க வளர்ச்சி அடைந்தாலும், கிராமப்புறங்களில் பல கோடி பேர் உள்ளனர். நகரின் செழுமையுடன், கிராமப்புற வளர்ச்சிக்கு உயிராற்றல் வழங்க வேண்டும். கிராமப்புற வளர்ச்சி, தொழில் துறையின் வளர்ச்சி மட்டும் அல்ல. பொருள் சார் மற்றும் ஆன்மீக சமூக நாகரிகத்தின் இசைவான வளர்ச்சியை முன்னேற்றி, பண்பாட்டு வாழ்க்கையை வளர்க்க வேண்டும் என்றும் ஷிச்சின்பீங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்