​ஷிச்சின்பிங் உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் சந்திப்பு

மதியழகன் 2018-04-16 20:00:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங் உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் சந்திப்பு

உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான கிளவுஸ் ஸ்வாபை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார்.

அண்மைக்காலமாக, உலகமயமாக்கத்தை எதிர்த்தல் மற்றும் பாதுகாப்பு வாதம் போன்ற ஒலி எழுந்து வருகிறது. அது, உலகப் பொருளாதாரத்தில் இடர்பாட்டையும் உறுதியற்றத் தன்மையையும் தீவிரமாக்கியுள்ளது. உலகில் தற்போதுள்ள பிரச்சினையையும், அறைகூவல்களையும் சமாளிக்கும் விதம்,  சமத்துவமான கலந்தாய்வு நடத்தி,  பல தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெற்று, உலகிற்கு ஒளிமிக்க, நிலையான மற்றும் அருமையான எதிர்காலத்தைக்  கொண்டு வரும் வகையில் பொறுப்பேற்கும் பெரிய நாடான சீனா, சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆக்கமுடன் பங்காற்றும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

சீனாவும் உலகப் பொருளாதார மன்றமும், ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலைக் கண்டுபிடித்து, உலகளாவிய அறைகூவல்களுக்கு நடைமுறைக்கு ஏற்ற தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்