ஷி ச்சின்பிங்-மோடி சந்திப்பு

2018-06-09 20:57:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷி ச்சின்பிங்-மோடி சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் சனிக்கிழமை ட்சிங் தாவ் நகரில் சந்திப்பு நடத்தினர்.

ஷி ச்சின்பிங்-மோடி சந்திப்பு

சந்திப்பின் போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,

சுமார் ஒரு திங்களுக்கு முன், நாம் இருவரும் வூஹான் நகரில் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய பல ஒத்த கருத்துக்களை உருவாக்கினோம். சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்குத் தகுந்த ஆக்கப்பூர்வ சூழ்நிலை உருவாகி வருகின்றது என்று சுட்டிக்காட்டினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடு என்ற முறையில் இந்தியா நடப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உளமார்ந்த வரவேற்பு என்றும் அவர் தெரிவித்தார்.

வூஹான் பேச்சுவார்த்தை சீனாவுடனான உறவை மேலும் வளர்க்க வேண்டும் என்ற எனது நம்பிக்கையை  மேலும் உறுதிப்படுத்தியது என்று மோடி தெரிவித்தார். உலக அமைதி, செழுமை ஆகியவற்றுக்கு இந்திய-சீன ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா செயல் முறையில் பங்காற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்