வெளிநாட்டுத் திறப்பு, சீனாவின் வளர்ச்சிக்கான முக்கியம்

சரஸ்வதி 2018-06-22 10:07:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெளிநாட்டுத் திறப்பு, சீனாவின் வளர்ச்சிக்கான முக்கியம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 21ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் நடைபெற்ற உலகத் தலைமைச் செயல் அதிகாரி வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்ட நாடு கடந்த தொழில் நிறுவனங்களின் பொறுப்பார்களைச் சந்தித்து, கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. எதிர்காலத்தில், வெளிநாட்டுத் திறப்பு, சீனாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். சர்வதேசச் சமூகம் கையோடு கை கோர்த்து, ஒன்றுடன் ஒன்று ஆலோசனை நடத்தி, கூட்டுப் பயன்களைப் பகிர்ந்து, வெளிநாட்டுத் திறப்பு மற்றும் புத்தாக்கம் வாய்ந்த பாதையில் நடைபோட வேண்டும் என்று ஷிச்சின்பீங் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். வர்த்தக பாதுகாப்புவாதத்தையும், ஒரு சார்புவாதத்தையும் எதிர்க்க வேண்டும். மனித குலம், நலன், கடமை ஆகியவை வாய்ந்த தலைவிதிப் பொது சமூகத்தைக் கட்டியமைக்க, சர்வதேச சமூகம் கைகோர்த்துக்கொண்டு முயற்சிகளை செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகள், வெளிநாட்டுத் திறப்பு, ஒத்துழைப்பு, கூட்டு பயன் எனும் தலைப்பில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, புத்தாக்கம், பசுமையான வளர்ச்சி, உலக மேலாண்மை முதலிய கருப்பொருட்கள் குறித்து கருத்துகளை வெளியிட்டனர். அவர்களின் கருத்துக்களை ஷிச்சின்பீங் உணர்வுபூர்வமாக கேட்டறிந்தார். தொடர்புடைய ஆலோசனைகள் மற்றும் கருத்துகளுக்கு ஷிச்சின்பீங் பதிலளித்தார். அவர் கூறியதாவது

சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த கடந்த 40 ஆண்டுகளில், உங்கள் நிறுவனங்கள், சீனாவுடன் மேலதிகமாக தொடர்பு மேற்கொண்டு வருகின்றன. நீங்கள், சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கைக்கு சாட்சியாக இருந்து, அதன் பயனை நேரிடையாக அனுபவித்து வருப்பவர்களாக இருக்கின்றீர்கள் பயன் பெறுவர்களாவர் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 40 ஆண்டுகளில், சீனாவில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீனப் பொருளாதாரம் அதிகமான வளர்ச்சி வேகத்தை நிலைநிறுத்தி வருகிறது. ஐ.நாவின் வறுமை ஒழிப்புக்கான வரையறையின்படி, 70 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற இலக்கை சீனா நனவாக்கியுள்ளது. புதிய யுகத்தில், வெளிநாட்டுத் திறப்புப் பணி இடைவிடாமல் தொடரும். உயர் தரமுள்ள வெளிநாட்டுத் திறப்புப் பணியினைச் சீனா தொடர்ந்து மேற்கொள்ளும். புதிய வளர்ச்சி முன்னேற்றத்தில், சீனா மேலும் தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்