ஷீச்சின்பிங்-மேட்டிஸ் சந்திப்பு

2018-06-27 19:36:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷீ ச்சின்பிங்-மேட்டிஸ் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 27ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸைச் சந்தித்தார்.

தற்போதைய உலகம், பெருமளவில் வளர்ச்சியும் மாற்றமும் அடையும் காலக் கட்டத்தில் உள்ளது. உலகின் பலதுருவமயமாக்கமும், பொருளாதார உலகமயமாக்கமும் ஆழமாக வளர்ந்து வருகின்றன. பன்னாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் நிலை மேலும் நெருக்கமாகியுள்ளது. சீன-அமெரிக்க உறவு, உலகில் மிக முக்கியமான இரு தரப்பு உறவாகும். இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருவது, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். உலகம் மற்றும் பிரதேச செழுமை, நிதானம், அமைதி ஆகியவற்றுக்கும் இது துணை புரியும் என்று ஷீ ச்சின்பிங் தெரிவித்தார். இரு நாட்டுப் படைகள் தொடர்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்பை ஆழமாக்கி, கருத்து வேற்றுமையைக் கட்டுப்படுத்தி, இரு நாட்டு ராணுவ உறவின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஷீ ச்சின்பிங்கின் சந்திப்புக்கு மேட்டிஸ் நன்றி தெரிவித்தார். இரு நாடுகள் மற்றும் இரு நாட்டுப் படைகளின் உறவில் அமெரிக்கா பெரும் கவனம் செலுத்துவதாகவும், இரு நாட்டுப் படைகளின் உறவு, இரு நாட்டுறவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மேட்டிஸ் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்